தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். தங்களுக்கான அரசியல் தலைவரைத் தேர்வு செய்வதில் அவர்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள். அது எத்தனை ஆண்டுகள் ஆயினும் இவ்விதி என்பது மாறப்போவதில்லை என்பது அவர்கள் இத்தனை ஆண்டு அரசியல் பயணத்தில் தங்கள் தலைவரை தேர்வு செய்ததில் இருந்து தெரியவருகிறது.
இப்போது அடுத்த கட்ட தலைவர்கள் அரசியல் பயணத்திற்குத் தயாராகிவிட்டனர். ஏற்கனவே கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் குரல்கொடுத்த போது, அவர் அதைத்தவறவிட்டு, சில ஆண்டுகளுக்கு அரசியல் கோதாவில் குதிக்கவிருப்பதாக கூறி, அறிவித்தார். அவரது நேரம் உடல் நிலை ஒத்துழைக்காததால் அதிலிருந்து பின்வாங்கி, தற்போது 70 வயதிலும் சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலிக்கிறார்.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கமல் மக்கள் நீதி மய்யம் தொடங்கி தற்போது வரை அக்கட்சியை வளர்த்து வருகிறார். ஆனால் பெரியதாக திராவிட அரசியலுக்கு முன் கெம்பீரிக்க முடியவில்லை. அதனால் திராவிட அரசியல் எனும் வாகத்தில் ஏறிப்பயணிக்கத் தொடங்கிவிட்டார்.
ஏற்கனவே சினிமாவில் இருந்து தமிழக அரசியல் வானில் அடியெடுத்து வைத்த நட்சத்திரங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தவிர கம்பீரமான தலைவர்களாக நிற்கமுடியவில்லை என்பதைவிட மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, சமீபத்தில், அக்கட்சியின் கொடியையும் கொடிப்பாடலையும் வீரத் தினவூட்டும் வீடியோவாக வெளியிட்டிருந்தார் விஜய்.
’ நேற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுவரும் 27-10-24 அன்று விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை கிராமத்தில் நடக்கவுள்ளது ’என்று அறிவித்து, ’தமிழக மக்களின் மனங்களை வெல்லத் தீர்மான நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கு ஆயத்தப்பணிகள் நடந்து வருவதாகவும்’ கூறியிருந்தார்.
அடுத்த தலைமுறைத் தலைவர்களை இளைஞர்கள் தேடத் தொடங்கியுள்ள காலம் இது. ஆனால், திராவிட அரசியலைப்பொறுத்தவரை, திமுகவில், முதல்வர் மு.க.ஸ்டாலுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என்பது உறுதியானது என்றாலும் தற்போதே அவருக்கு துணைமுதல்வர் பதவிக்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விஜய் அரசியல் கட்சி தொடங்கியது திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல அரசியல் விமர்சகரும் ஜர்னலிஸ்டுமான மணி தெரிவித்து, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உதய நிதியைவிட விஜய்க்கு வரவேற்பு அதிகமிருக்கும் என்று கூறியுள்ளார்.
ஒரே மந்தையில் இருந்த ஆடுகள் இருவேறு பாதையில் பிரிந்து சென்று மீண்டும் அவை சந்தித்தபோது பேசமுடியவில்லையே என்பதுபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் குருவி படத்தின் மூலம் சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்துவைத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது விஜய் ரசிகர் என்பதைத்தாண்டி அவரை அரசியலில் சகப் போட்டியாளராகத்தான் பார்க்கமுடியும்!
ஏனென்றால் இருவரும் இளையதலைமுறையைக் கவரும் வகையில் தங்கள் முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். பாரம்பரிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆதரவு உதய நிதி ஸ்டாலினுக்கு இருந்தாலும், விஜய்யும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வசூல் மன்னனாக ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் மார்க்கெட்டிலும், ரசிகர் பலத்திலும் முன்னிலையில் உள்ளார்.
இது அவருக்கான காலம் என்றாலும் அவர் பீக்கில் இருக்கும்போதே சினிமாவைத் துறந்து, ரூ.200 கோடி வருமானம் கொளிக்கும் தொழிலைவிட்டு அரசியலில் மக்களுக்குச்சேவை செய்யப்போவதாக களமிறங்கியுள்ளது எல்லோராலும் உற்றுப் பார்க்கத்தக்கதாக உள்ளது.
எனவே இருவருக்கும் போட்டிகள் மிகுந்திருந்தாலும், விஜய் அரசியல் பின்புலன் இன்றி, மக்கள் இயக்கத்தினர் மற்றும் தொண்டர்கள்,ரசிகர்களின் ஆதரவுடன் மக்களிடம் ஆதரவைப்பெறவும் தன்னையும் தன் கட்சியையும் மக்களிடம் கொண்டுசெல்லப் போராட வேண்டியிருக்கும்! ஏற்கனவே மக்களிடம் அறிமுகமாகி, சினிமாவிலும் நடிகராக நடித்து, தயாரிப்பாளராகி, இன்று மக்கள் பிரதிநிதியாக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மக்களிடம் வரவேற்பு இருப்பதில் ஆச்சர்யமில்லை.
ஆனால்,மாற்றம் என்றவொன்றை மக்கள் ஏற்கத் தயாராகும் பட்சத்தில் ஏற்கனவே வெளியான கருத்துக் கணிப்புகளின்படி, விஜய்க்கு மக்கள் மனதிலும் அவர்கள் இடும் வாக்கிலும், அரசியல் பயணத்தின் வருகையிலும் அவர் எதிர்பார்த்தபடி தனித்த செல்வாக்குச் செலுத்த வாய்ப்புண்டு!