திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொறுப்போடு அரசியல் செய்யுங்கள்.. கட்டளை போட்ட விஜய்

Actor Vijay: விஜய் தற்போது லியோ மற்றும் தளபதி 68 படத்தில் என்னதான் பிசியாக இருந்தாலும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குகிறார். இது சம்பந்தமாக விஜய், ரசிகர்களை அடிக்கடி சந்தித்து தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை விவாதித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அடுத்த பிளான் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக நாளை பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.

Also read: விஜய் போட்ட கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 முடிவதற்குள் ஒரு வழி ஆயிடுவாரு போல

அதற்கு முதற்கட்ட வேலையாக ஏற்கனவே 234 தொகுதி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களின் பட்டியலை இவருடைய ரசிகர்கள் தயார் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை பகுதியில் நடைபெற இருப்பதால் ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது.

ஆனால் இதில் ஒரு விஷயத்தை கண்டிப்பாக ஃபாலோ பண்ண வேண்டும் என்று விஜய், இவருடைய ரசிகர்களுக்கு ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார். அதாவது இதை விளம்பரப்படுத்துவதற்காக இவருடைய ரசிகர்கள் முக்கியமான இடங்களில் பேனர் வைக்க திட்டமிட்டு இருந்தார்கள்.

Also read: லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

ஆனால் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்து எந்த இடங்களிலும் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் எப்படியாவது இந்த நிகழ்ச்சியை ஆரவாரப்படுத்த வேண்டும் என்பதற்காக சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

இவர் என்னதான் அரசியல் ரீதியாக இது அனைத்தையும் செய்வதாக இருந்தாலும் இதுவரை இவரை போல் எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்து வருகிறார் என்ற பெருமிதத்துடன் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே இவரை நினைத்து சந்தோஷப்பட்டு வருகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்குது என்றால் அது நிச்சயமாக நல்ல விஷயமாகத்தான் பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. எல்லோரும் ஒதுக்கி வைக்கும் விஜய் பட நடிகை

Trending News