Rajinikanth: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கொண்டே இருக்கும் கூலி படம் தான் அவருடைய கடைசி படம் என சில மாதங்களுக்கு முன் ஒரு வதந்தி கிளம்பியது. தற்போது அந்த வதந்தியே உண்மையாகி விடுமோ என ரஜினி ரசிகர்கள் பயப்படும் அளவிற்கு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரஜினிகாந்தின் கனவு படம் என்று கூட சொல்லலாம். இதில் எப்படியாவது அமீர் கானை நடிக்க வைக்க வேண்டும் என ஒரு பெரிய பேச்சு வார்த்தை வேறு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ரஜினிகாந்த்திற்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி நடைபெற்ற பிறகு பூரண குணமாகிவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே ரஜினிகாந்த் தன்னிடம் இந்த சிகிச்சை பற்றி சொல்லியிருந்ததாகவும் அதற்கு ஏற்றது போல் தான் படப்பிடிப்பு வைத்ததாகவும் லோகேஷ் கனகராஜ் சொல்லி இருந்தார். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தற்போது ஒரு பேட்டியில் ரஜினி பற்றி ஒரு தகவலை சொல்லி இருக்கிறார்.
அதாவது கூலி படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறாராம். அங்கு அவர் சில வருடங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் மீண்டும் அவருக்கு பரிசோதனைகள் எல்லாம் நடைபெற இருக்கிறதாம்.
இந்த பரிசோதனைகள் நடந்து முடிந்த பிறகு அங்குள்ள மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி ரஜினிகாந்த் நடந்துகொள்ள இருப்பதாகவும் பாலு சொல்லி இருக்கிறார்.
அந்த பேட்டியில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் என்று எந்த தரப்பிலிருந்தும் வெளியாகவில்லை. உண்மையை சொல்லப் போனால் ரஜினிகாந்த் கூலி படத்திற்கு பிறகு ரஜினி, ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிளான் 90% உறுதியாகி இருக்கிறது. இதற்காக நெல்சன் எல்லா வேலையையும் தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.