வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ சக்சஸ் மீட்டை வைத்தே பல கோடி சம்பாதித்த லலித்.. அம்பலமான உண்மை

Leo Success Meet: லியோ படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து நாட்களைக் கடந்த நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் சக்சஸ் மீட் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எப்போதுமே விஜய்யின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஏனென்றால் அவருடைய படத்தை விட ஒரு மடங்கு கூடுதலாகவே அவருடைய குட்டி ஸ்டோரிகாக ரசிகர்கள் ஏங்குவதுண்டு.

ஆனால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் சில காரணங்களினால் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணங்கள் பல கூறப்பட்ட நிலையில் அதிக கூட்டத்தை தங்களால் சமாளிக்க முடியாது என்பதால் லியோ ஆடியோ லான்ச் நடத்த முடியவில்லை என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது.

இதை தொடர்ந்து லியோ படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வந்தாலும் ஒருபுறம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதை நேற்று நடைபெற்ற லியோ வெற்றி விழாவுக்கான விஐபி டிக்கெட் விலை தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி இதே இடத்தில் தான் நடைபெற்றது.

Also Read : லியோவை கைவிட்ட 5 முக்கிய பிரபலங்கள்.. வெற்றி விழாவில் கலந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆன சம்பவம்

அப்போது அதிகமாக டிக்கெட் விற்கப்பட்டதால் அங்கு குளறுபடி ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இதை அடுத்து பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் ஏஆர் ரகுமான் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டது மட்டுமன்றி இவ்விழாவில் கலந்து கொள்ளாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இதே சம்பவம் தான் இப்போது லியோ வெற்றி விழாவிலும் நடந்திருக்கிறது. அதாவது இந்த நிகழ்வில் விஐபி டிக்கெட் விலை மட்டும் கிட்டத்தட்ட 10,000 ரூபாயாம். அவ்வாறு விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் விஐபி டிக்கெட் வாங்கிய பிறகும் தன்னை அனுமதிக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இவ்வாறு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் இந்த விழாவை தன்னால் பார்க்க முடியவில்லை என்று ரசிகை சொன்னது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. லியோ படம் தியேட்டரில் வசூலித்ததை விட சக்சஸ் மீட்டை வைத்து தயாரிப்பாளர் லலித் நல்ல லாபத்தை பார்த்து உள்ளார் என்று இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய விஜய்யின் கடைசி 5 படங்கள்.. தடுமாறினாலும் ரெக்கார்ட் பிரேக் செய்த லியோ

Trending News