சினிமாவில் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் மீது நமக்கு அதிக ஈர்ப்பு ஏற்படுவதற்கு அவர்களது நடிப்பு, அழகு இவைகள் தாண்டி நாம் ரசிக்கும் அவர்களது குரலும் ஒரு காரணம். ஆனால் பல நடிகைகள் இன்றளவும் தங்கள் சொந்த குரலில் பேசுவதில்லை, அவர்களுக்கு குரல் கொடுக்க பல டப்பிங் கலைஞர்கள் உள்ளனர். அவர்களை பெருமை படுத்தவே இந்த பதிவு.
முதலில் நமது விருப்பமான ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்த கலைஞர்களை பாப்போம்.
ரஜினி:
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது சொந்த குரலில் தமிழ் சினிமாக்களில் பேசினாலும், இவரது தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ரஜினிக்கு குரல் கொடுப்பவர் பாடகர் மனோ.
கமல்:
பல மொழிகள் சரளமாக பேசக்கூடிய நமது உலகநாயகனுக்கு தெலுங்கு டப்பிங் குரல் கொடுப்பவர் பாடகர் S.P.B
பிரபுதேவா:
ஆரம்ப நாட்களில் பிரபு தேவாவிற்கு குரல் கொடுத்தவர் நடிகர் சியான் விக்ரம்.
அப்பாஸ்:
ஆரம்ப நாட்களில் அப்பாஸிற்கு குரல் கொடுத்தவரும் நம் சியான் விக்ரம்தான்.
பிரம்மானந்தம்:
நம் அனைவருக்கும் பல படங்களில் பரிட்சயமான தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் அவர்களுக்கு ஆரம்ப காலம் முதல் குரல் கொடுத்து வருபவர் நடிகர் M.S.பாஸ்கர்.
மனிஷா கொய்ராலா:
மனிஷாவிற்கு பல தமிழ் படங்களில் குரல் கொடுத்தவர் நடிகை ரோகினி அவர்கள். மேலும் ரோகினி ஐஸ்வர்யா ராய், ஜோதிகா போன்ற நடிகைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
ஊர்மிளா:
ஊர்மிளா தமிழில் நடித்த இந்தியன் படத்திற்கு குரல் கொடுத்தவர் நடிகை பானுப்ரியா
மோகன்:
நமது மைக் மோகனின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றது அவரது அமைதியான மனதை கவரும் குரல்தான். அக்குரலுக்கு சொந்தமானவர் S.N.சுரேந்தர். இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் சென்னை 600028 இவரை பலருக்கு அறிமுகப்படுத்தியது.
ஜாக்கி ஜான்:
ஜாக்கி ஜானின் சினிமா மட்டுமல்ல சுட்டி டிவியில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கும் குரல் கொடுப்பவர் முரளிகுமார். இவரை சில பாலச்சந்தர் படத்திலும் சீரியல்களிலும் பார்த்திருப்பீர்கள்.
நயன்தாரா:
நயன்தாரா மற்றும் பல நடிகைகளுக்கு குரல் கொடுப்பவர் நடிகை தீபா வெங்கட். இவர் முதலில் சீரியலில் அறிமுகமாக சில திரைப்படங்களில் நடித்தவர். தற்போது டப்பிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன்:
அம்மன் உள்பட சில படங்களுக்கு ரம்யா கிருஷ்ணனுக்கு குரல் கொடுத்தவர் நடிகை சரிதா அவர்கள்.
இலியானா:
இலியானாவிற்கு டப்பிங் கொடுப்பவர் நமது சுப்ரமணியபுரம் சுவாதிதான்.
சூர்யா:
நடிகர் சூர்யாவின் தெலுங்கு டப்பிங்கில் அவரது தம்பி கார்த்தி அவருக்கு குரல் கொடுத்துள்ளார். இதேபோல் கார்த்தியின் தெலுங்கு டப்பிங் படங்களில் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
காஜல் அகர்வால்:
நடிகை காஜல் அகர்வாலின் ஆரம்ப கால திரைப்படங்களுக்கு நடிகை சார்மி குரல் கொடுத்துள்ளார்.
நதியா:
நடிகை நதியாவிற்கு பல படங்களில் குரல் கொடுத்துல்லவர் நடிகை மந்த்ரா அவர்கள். தெலுங்கில் மந்த்ராவின் பெயர் ராசி.
சுருதி ஹாசன்:
சுருதி ஹாசனுக்கு நடிகை மடோனா செபாஸ்டின் குரல் கொடுத்துள்ளார்.
சொர்ணாக்கா:
தூள் படத்தில் சொர்ணாக்காவிற்கு குரல் கொடுத்தவர் ஸ்ரீ லேகா ராஜேந்திரன். இவர் 80கள் முதலே நடித்து வருகிறார் இன்றும் பல சீரியல்களில் இவரை காணலாம்.
ராதா:
அதிக நடிகைகள் இவருக்குத்தான் டப்பிங் கொடுத்துள்ளனர். சரிதா, ஸ்ரீ ப்ரியா, ராதிகா போன்ற நடிகைகள் ராதாவிற்கு குரல் கொடுத்துள்ளனர்.