சூர்யாவின் சினிமா கேரியரில் கங்குவா பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு தவிடு பொடி ஆகிவிட்டது. அதிக பட்ஜெட் என்பதால் வசூல் ரீதியாக படுதோல்வி சந்தித்தது.
இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கூறிய 2000 கோடி வசூல், சூர்யாவின் மேடைப்பேச்சு மற்றும் பல பிரபலங்கள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது தான்.
ட்ரெய்லரை பார்த்துவிட்டு சிறுத்தை சிவாக்கு போன் செய்த அஜித் கங்குவா வெளிவந்த பின் தொடர்பு கொள்ளவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்ததாம் சிறுத்தைக்கு.
சமீபத்தில் சிறுத்தை சிவாவுக்கு போன் செய்த அஜித் தெளிவா ஒரே வார்த்தை Confident-டா இருங்க Bro என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளார்.
இதனால் சிறுத்தை சிவா சற்று புத்தி தெளிந்து அடுத்த படத்தில் தன்னுடைய கவனத்தை திசை திருப்பி உள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அஜித்தின் இந்த செயலை பார்த்து சூர்யா ரசிகர்களும் ஆச்சரியப்பட்டுள்ளனர். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல தோல்வி கற்றுக் கொடுக்கும் பாடத்தை வைத்து வெற்றியை தொட்டுவிடலாம்.