திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

எனக்கும் நயன்தாராவுக்கும் எப்படிப்பட்ட உறவு தெரியுமா.? ஓபன் ஆக போட்டு உடைத்த சந்தானம்

Actress Nayanthara and Actor Sandhanam: சந்தானம் காமெடியனாக பல பாராட்டுகளை பெற்ற நிலையில், ஹீரோவாகவும் நடித்துக் காட்ட முடியும் என்று பல படங்களில் நடித்து வருகிறார். அதில் எதிர்பார்த்த அளவுக்கு இவரால் வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், தொடர்ந்து ஹீரோ படலத்தை கைவிடாமல் நடித்துக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த “டிடி ரிட்டன்ஸ்” எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வடக்குப்பட்டி ராமசாமி படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. மேலும் சில சூழ்நிலை காரணமாக மறுபடியும் காமெடியனாக பல படங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக தற்போது இவர் அளித்த பேட்டியில் இவருடைய வருங்கால படங்களை பற்றியும், சில விஷயங்களையும் பேசி இருக்கிறார்.

Also read: அப்படி இருந்த சந்தானம் இப்படி ஆயிட்டார்.. ஒரே நாளில் 4 பட சூட்டிங், அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

அதில் இவருக்கும் நயன்தாராவுக்கும் உள்ள உறவு முறையே பற்றி கூறி இருக்கிறார். அதாவது சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் படத்தில் நயன்தாராவுக்கும் இவருக்கும் அண்ணன் தங்கை போல் உறவு ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து நயன்தாராவுக்கு ஒரு அண்ணனாக என்னை கருதி பல விஷயங்களை மனதில் வைத்திருக்கிறேன். அது என்னுடைய ஆசை என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது நயன்தாரா சினிமாவில் என்னதான் பிசியாக இருந்தாலும் கல்யாண வாழ்க்கைக்கு சென்று ரெண்டு குழந்தைக்கு வாடகை தாய் மூலம் தாயாக இருக்கிறார். அவ்வப்போது இவர்களுடைய குழந்தைகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இவர்களின் மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

Also read: மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி போட ஆசைப்படும் யோகி பாபு.. வெளியான சூப்பர் அப்டேட்

அந்த வகையில் சந்தானம் கூறியது, நயன்தாராவின் இரண்டு குழந்தைகளுக்கும் மாமன் என்கிற முறையில் என் மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அத்துடன் தங்கைக்கு தேவையான அனைத்து சீர் வகைகளையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அப்பொழுது தான் என்னுடைய உறவு இன்னும் நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். நயன்தாராவுக்கு இப்படி ஒரு அண்ணன் உறவு சந்தானத்திடம் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் சந்தானத்தின் ஆசையும் எதிர்பார்ப்பையும், பத்திரிகையாளர்கள் முன்னாடி ஓப்பனாக சொல்லியிருக்கிறார். இது பத்திரிகையாளர்களுக்கு சொன்ன மாதிரி தெரியவில்லை இவருடைய ஆசையை நயன்தாராவுக்கு தெரியப்படுத்தியது போல் இருக்கிறது. எது எப்படியோ கண்டிப்பாக நயன்தாரா காதுக்கு இந்த செய்தி போகும். மாமன் முறையில் சந்தானத்தை வைத்து அழகு பார்க்க போகிறாரா என்பதை பார்க்கலாம்.

Also read: தங்க முட்டை போடும் வாத்து நயன்தாரா.. அட்லியால் வந்த சந்தேகம், கண்கொத்தி பாம்பாக மாறிய விக்கி

Trending News