வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கல்லா கட்ட தயாரான தனுஷ்.. குபேரா ரிலீஸ் எப்போது தெரியுமா.?

Dhanush : தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை அவரே இயக்கி, நடித்திருந்தார். இந்தப் படத்தின் வரவேற்புக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார்.

அதன்படி அவரது கைவசம் குபேரா, இட்லி கடை போன்ற படங்கள் இருக்கிறது. அதோடு இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் தான் நடிக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த சூழலில் இப்போது மீண்டும் கல்லா கட்ட தயாராகிறார் தனுஷ்.

சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் தான் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

குபேரா ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

அதாவது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி குபேரா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்கான பணிகள்தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. சில வருடங்களாகவே தனுஷின் படங்கள் சரியாக போகாத நிலையில் ராயன் வெற்றியை கொடுத்தது.

இந்த சூட்டோடு அடுத்தடுத்த படங்களை தனுஷ் சரமாரியாக இறக்க இருக்கிறார். மேலும் இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார். இது தவிர நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் தான் இயக்கி வருகிறார். இவ்வாறு நிக்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக சோபனா கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் தேசிய விருது வாங்கியிருந்தார். மேலும் தனுஷுக்கு தன்னுடைய நன்றியையும் நித்யா மேனன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News