வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கப் போவது யார் தெரியுமா? காவியா வெளியேற காரணம் இதுதான்

சின்னத்திரை நடிகை காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்னும் கேரக்டரில் குமரனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இப்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காவ்யா ஏற்கனவே விஜே சித்ராவுக்கு மாற்றாக இந்த சீரியலில் வந்தவர்.

நடிகை காவ்யா விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு என்னும் கேரக்டரில் அறிமுகமானார். இந்த கேரக்டரில் அந்த அளவுக்கு காவ்யாவுக்கு ரீச் இல்லாமல் தான் இருந்தது. காவ்யாவுக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். காவ்யாவும் அந்த கேரக்டரில் ஈஸியாகவே பொருந்தி விட்டார்.

Also Read: பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களின் உண்மையான கணவன் மனைவி.. 5 ஜோடிகளின் அசத்தலான வீடியோ

இந்நிலையில் தான் காவ்யா பாண்டியன் ஸ்டோரில் இருந்து விலகி இருக்கிறார். காவ்யாவுக்கு ஏற்கனவே நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. நடிகர் கவினின் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும், இதனால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகி விடுவார் என்று சொல்லப்பட்டது.

மேலும் காவ்யா பிக்பாஸ் செல்ல இருப்பதாகவும் வதந்திகள் வந்தன. ஆனால் காவ்யா பிக்பாஸுக்கு செல்லவில்லை. இதற்கிடையில் ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றில் காவ்யா ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அதனால் தான் அவர் பாண்டியன் ஸ்டோரில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

Also Read: தளபதியின் தந்தை கொடுத்த வாய்ப்பு.. தலைகால் புரியாமல் ஆடும் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்

காவ்யாவுக்கு பதிலாக லாவண்யா என்பவர் முல்லை கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூட சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படி காவ்யா விலகினால் இதோடு மூன்றாவது முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கேரக்டர் மாற்றப்படும்.

இந்த முல்லை கேரக்டருக்கு நல்ல ரீச் வாங்கி கொடுத்தது என்றால் அது விஜே சித்ரா தான். சித்ராவின் மரணத்திற்கு பின் வந்த முல்லை கேரக்டரில் வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயாராக இல்லை. காவ்யாவின் என்ட்ரிக்கு பிறகு அவரை ஏற்றுக்கொள்ளவே கொஞ்சம் தாமதமானது. இந்நிலையில் புதிய முல்லையை பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது இனி தான் தெரியும்.

Also Read: மருமகளை தாங்கிப்பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இந்த தலைமுறையின் மிகப்பெரிய பிரச்சனை

Trending News