ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மனோபாலாவின் காட்ஃபாதர் யார் தெரியுமா? இன்று வரை கடும் கோபத்தில் இருக்க இதுதான் காரணம்

முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து காமெடி நடிகராக கலக்கிய நடிகர் மனோபாலா, சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய மறைவு இன்று வரை ரசிகர்களாலும் பிரபலங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதிலும் அவருடைய மறைவுக்கு பின்பு தான் அவரைப் பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய பழைய பேட்டி ஒன்று தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அந்த பேட்டியில் மனோபாலா தனது காட்ஃபாதர் யார் என்பதையும் அவர் தன் மீது கடும் கோபத்தில் இருப்பதற்கான காரணம் என்ன என்பதையும் உடைத்து கூறி இருக்கிறார்.

Also Read: மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னதெல்லாம் சுத்த பொய்.. முகத்திரையை கிழித்த பிரபலம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக சுமார் 16 படங்களில் பணிபுரிந்து, அதன் பிறகு 1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை என்ற படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மனோபாலா. அதை தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டாரை வைத்து ஊர்காவலன் என்ற வெற்றி படத்தையும் இயக்கினார். அது மட்டுமல்ல சதுரங்க வேட்டை என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் இயக்குனர், காமெடி நடிகர், தயாரிப்பாளர் என ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கும் மனோபாலாவின் காட்ஃபாதர் வேறு யாருமில்லை உலக நாயகன் கமலஹாசன் தான் என்று அவர் பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Also Read: அப்பாவை சந்தோஷப்படுத்திய மகன்.. மனதை கனக்க வைத்த மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்

தன்னுடைய வாழ்க்கையில் காட்ஃபாதராக இருந்தவர் நடிகர் கமலஹாசன் தான். நான் சாப்பிடும் சாப்பாட்டிற்கு அவர்தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். அது மட்டுமல்ல கமலஹாசன் தான் தன்னை ரஷ்யன் எம்பஸி போன்ற இடங்களில் உலக தரத்திலான படங்களை பார்க்க வைத்தவர். ஆனால் நான் கமர்சியல் படங்களை இயக்குவது என்னுடைய குருநாதர் கமலஹாசனுக்கு பிடிக்கவில்லை.

நான் கமர்சியல் ரூட்டில் போனது அவருக்கு மிகவும்  வருத்தம். என்கிட்ட கமல் என்ன எதிர்பார்த்தாரோ, அதை இப்போ மணிரத்தினம் பண்ணிக்கிட்டு இருக்கிறார். கமலும் இந்த ஒரு காரணத்தால் தான் இப்போதும் தன் மீது கோபமாக இருப்பதாக மனோபாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

Also Read: 6 ஆண்டுகளாக மன உளைச்சலால் தவித்த மனோபாலா.. சாமி நடிகரால் இறுதி வரை நிறைவேறாமல் போன ஆசை

Trending News