திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Suriya : சூர்யா போட்ட இந்த லேடி டிரஸ் யாருடையது தெரியுமா.? பட்ஜெட்டை கம்மி பண்ண KV ஆனந்த் செய்த வேலை

கேவி ஆனந்த் கோ, அயன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த இவர் அதன் பிறகு இயக்குனராக அறிமுகமானார். இவருடைய முதல் படம் கனா கண்டேன் என்றாலும் அயன் படம் தான் கே வி ஆனந்தை பிரபலமாகியது.

சூர்யாவுக்கும் இந்த படம் கம்பேக் கொடுத்தது. போதை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யா பல கெட்டபில் ஒரு பாடலில் வருவார். குறிப்பாக சிவப்பு நிற உடையில் பெண் வேடமிட்டு சூர்யா வருவது ரசிகர்களால் கவரப்பட்டது.

சிவாஜியில் ஸ்ரேயா போட்ட உடையை அணிந்த சூர்யா

sherya-suriya
sherya-suriya

பொதுவாக முன்னணி ஹீரோக்கள் பெண் வேடமிட தயங்குவார்கள். ஆனால் சூர்யா அந்த படத்தில் சில காட்சிகளில் அந்த உடையில் வந்தார். ஆனால் உண்மையில் அந்த உடை யாருடையது என்பது இப்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது கேவி ஆனந்த் ஷங்கரின் முதல்வன், சிவாஜி போன்ற படங்களிலும் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தார். அவ்வாறு சிவாஜி படத்தில் பணி புரிந்த போது தான் ஸ்ரேயா ஒரு பாடலில் இதே உடையை அணிந்திருப்பார்.

அதை மனதில் வைத்துக் கொண்டு தான் அயன் படத்தில் அந்த கெட்டப்பை கே வி ஆனந்த் உருவாக்கி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பட்ஜெட்டை கம்மி பண்ணுவதற்காக ஸ்ரேயா போட்டிருந்த உடையையே சூர்யாவுக்கும் கொடுத்திருக்கின்றனர்.

இதை எப்படியோ நெடிசன்கள் கண்டுபிடித்து விட்டனர். ஆனாலும் லேடி கெட்டப்பில் சூர்யா சூப்பராக இருந்ததார். மேலும் கே வி ஆனந்த் பல படைப்புகளை கொடுத்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிட் தொற்றினால் உயிரிழந்தார்.

Trending News