சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இது தேமுதிக 2.O.. விஜயகாந்த்துக்கு பின் கட்சியை வழிநடத்த போவது யார் தெரியுமா?

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் மறைந்த நிலையில் அவரது கட்சியை யார் வழி நடத்தப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் இடம் இருந்தது. கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா தான் கட்சியை வழிநடத்தி வந்தார்.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக மற்றும் அதிமுக என மிகப் பெரிய ஆளுமை கட்சிகள் இருந்ததால் தேதிமுகவால் மிகப்பெரிய அளவில் வாக்குகள் பெற முடியவில்லை. கேப்டனுகாக மட்டுமே தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் தேமுதிகாவுக்கு ஆதரவளித்து வந்தனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா தொடர்ந்து தொண்டர்களிடம் பேசி வருகிறார். இப்போது விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொண்டர்களை சந்தித்து இருக்கிறார். அதாவது விஜயகாந்தின் மறைவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

Also Read : விஜயகாந்துக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சில்வர் ஜூப்ளி ஹீரோ.. ஒரே நாளில் முட்டி மோதிய படங்கள்

கேப்டனிடம் இருந்து ஒரு ரூபாய் கூட தான் எதிர்பார்க்கவில்லை. அவருடைய சொத்தான கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர்களுக்காகத் தான் எங்களை விட்டு சென்றிருக்கிறார். கேப்டனின் இரத்தம் என்னிடம் இருக்கலாம், ஆனால் தேதிமுக கட்சி மற்றும் கேப்டனின் கொள்கை எல்லோரிடமும் இருக்கிறது.

அதிமுக கட்சியில் ஒரு செங்கலை கூட அசைத்து பார்க்க முடியாது என உணர்ச்சி பூர்வமாக விஜயபிரபகரன் பேசி உள்ளார். இது தேமுதிக 2.0, இனி கட்சி படுபயங்கர செயல்படுத்த உள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் செல்வாக்கு நிறைந்த விஜயகாந்த் அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியாத நிலையில் அவரது மகன் தேமுதிக கட்சியை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை போகப் போகத்தான் தெரியும்.

Also Read : 30 வயதுக்குள் மறைந்த 5 நடிகைகள்.. மிகக் கொடூரமா இறந்த விஜயகாந்தின் 2 ஹிட் ஹீரோயின்கள்

Trending News