சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் டாக்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
ஹீரோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இடமாக மாறியுள்ளது டாக்டர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விட விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு காரணம் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தை இயக்கி வருகிறார். தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது.
கடந்த மார்ச் 23ஆம் தேதி டாக்டர் படம் வெளியாக இருந்த நிலையில் மீண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இப்போது தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை.
இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே டாக்டர் படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் பஞ்சாயத்து ஏற்பட்டதாகவும் கூறுகின்றன.
ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி ஏற்கனவே வாங்கி விட்டது. இதன் காரணமாக தற்போது ஓடிடியில் வெளியிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டதாம். ஆனால் இன்னும் சில தினங்களில் டாக்டர் ஓடிடி வெளியீடு என்பது உறுதியாகி விடும் என்கிறார்கள் டாக்டர் பட வட்டாரங்கள்.
