நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் பல பிரச்சனைகளை தாண்டி நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதாவது டாக்டர் படத்தில் விளையாட்டில் தோல்வி அடையும் ஆண் ஒருவருக்கு நைட்டி அணிவித்து தலையில் பூ வைத்து இனிமேல் உன் பெயர் கோமதி என கூறி கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளதாம். இந்த காட்சியை கண்ட மகளிர் அமைப்பினர் பெண்கள் என்றால் அவ்வளவு இழிவா? பெண் ஆடையை அணிந்தால் அசிங்கமா என கூறி இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாக்டர் படம் பல பஞ்சாயத்துகளை சந்தித்து தற்போது தான் திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் அவரது சம்பள தொகையை விட்டு கொடுத்து படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா என படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும் தோல்வியடைந்த ஆணுக்கு பெண் உடையை அணிவித்தால் அவன் அசிங்கப்படுவான் என்ற கான்செப்ட் மிகவும் தவறானது. பெண்கள் உடையை அணிவது அவ்வளவு கேவலமானதா இப்படி ஒரு காட்சியை படத்தில் வைத்தது ஏன் என பல்வேறு தரப்பினரும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
எதிர்பார்க்காமல் திடீரென உருவாகியுள்ள இந்த பிரச்சனையால் படக்குழுவினர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? தொடர்ந்து அடி மேல் அடி விழுந்தால் அந்த மனுஷனும் என்ன தான் செய்வார் பாவம்.