புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தனுசுக்கும் ஜிவி பிரகாசுக்கும் இவ்வளவு பிரச்சனை இருக்கா.? 2 ஒல்லி பசங்களும் ஆடிய ஆட்டம்

Actor Dhanush and GV Prakash have such a problem: ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது தனுஷ் வாழ்க்கையில் தான் கரெக்டா நடக்குது. நடிகர் தனுஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் நகமும் சதையுமாய் இருந்தது ஊரறிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து பண்ண படங்களும், பாடிய பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவர் இல்லாமல் அவர் இல்லை, அவர் இல்லாமல் இவர் இல்லை என்ற நிலை இருந்தது. அப்போதுதான் இந்த ஒல்லி பசங்க ரெண்டு பேரும் சேர்ந்து இசையமைப்பாளன் நடிகருமான ஜிவி பிரகாஷின் வாழ்க்கையில் பூந்து விளையாண்டு இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலை அறிந்ததுமே, ஜிவி பிரகாசுக்கும் தனுஷுக்கும் இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறதா என ஆச்சரியப்பட வைக்கிறது. ஜிவி பிரகாசுக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் தனுஷ் பிடுங்கி அனிருத்துக்கு கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஜிவி பிரகாசும் தனுசுடன் நல்ல நட்பில் தான் இருந்திருக்கிறார்.

ஆனால் தனுஷ், இப்படி எல்லாம் தொடர்ந்து செய்ததால் இவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டது. ஆனா இப்பொழுது ஜிவி பிரகாஷ் உடன் நட்பும் நெருக்கமாய் தனுஷ் பழகி வருகிறார். எல்லாத்துக்கும் காரணம் அவர் நடித்து சமீபத்தில் ரிலீஸான கேப்டன் மில்லர் படம் தான். இந்த படத்திற்கு இசையமைத்தது ஜிவி தான். ‘எனக்கு ஜிவி பிரகாசுக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது’ என்று தனுஷ் பேசி வருகிறார்.

Also Read: அயோத்திக்கு மோடி கூப்பிட்டும் தெனாவட்டு காட்டிய 6 பிரபலங்கள்.. வேலை கெடக்குதுன்னு விவசாயம் செய்த தல தோனி

தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனை

அதுமட்டுமல்ல தனுஷ் இயக்கி நடிக்கும் அவருடைய ஐம்பதாவது படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். முதலில் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளராக இருந்தது. ஆனால் இப்போது தனுஷ்- அனிருத் இருவருக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பால் ஜிவி பிரகாசை தான் தனுஷ் பக்கத்தில் வைத்துக் கொள்ள பார்க்கிறார்.

இந்த படங்கள் மட்டுமல்ல தனுஷ் அவர்கள் அவரது உறவினர் நடிகர் வருண் என்பவரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், அந்தப் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பதாக உள்ளார். ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த தனுஷ்- ஜிவி பிரகாஷ் இப்போது மறுபடியும் தங்களது நட்பை புதுப்பித்து அடுத்தடுத்த படங்களில் இவர்களது கூட்டணி தொடர்கிறது. இதையெல்லாம் பார்த்து அனிருத் தான் பயங்கர காண்டுடன் சுற்றுகிறார்.

Also Read: பொங்கல் ரேசில் அயலான், கேப்டன் மில்லர் எது வெற்றிவாகை சூடியது.. குருநாதருடன் மல்லுக்கட்டிய சிஷ்யன்

Trending News