புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் 2 மகள்கள்

நடிகர் லிவிங்ஸ்டன் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்துள்ளார். இவருடைய விரலுக்கேத்த வீக்கம், சொல்லாமலே போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் நடிகர் மட்டுமல்லாமல் உதவி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இணைந்துள்ளார்.

இப்போது திரைப்படங்களில் ஹீரோவுக்கு அப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். லிவிங்ஸ்டன் ஜன்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சின்ன குழந்தையாக இருந்த அவர்கள் இப்போது மலமலவென வளர்ந்துள்ளனர்.

Also Read : 21 வருடமாக வெளிவராமல் இருக்கும் லிவிங்ஸ்டன் படம்.. பாட்டு மட்டும்தான் ஹிட் போல

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் லிவிங்ஸ்டன் தனது குடும்பத்துடன் இந்த விழாவை கொண்டாடி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. லிவிங்ஸ்டனின் மகள்கள் ஜோவிதா மற்றும் ஜமுனா இடம்பெற்று இருந்தனர்.

இப்போது உள்ள ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அழகாக உள்ளனர். இதில் லிவிங்ஸ்டணின் முத்த மகள் ஜோவிதா கலாசல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Also Read : லிவிங்ஸ்டன் மகளுடன் கைகோர்த்த சின்னத்திரை பிரபலங்கள்.. சன் டிவியின் பிரமாண்டமான புது சீரியல்!

அதன் பின்பு அந்த தொடரில் இருந்து விலகி சன் டிவியிலேயே அருவி என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது. இந்த தொடரில் நடிகை அம்பிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் திரைப்படங்களில் இவர்களை நடிக்க வைக்க யோசித்துள்ளனராம். ஆகையால் வரும் காலங்களில் லிவிங்ஸ்டனின் மகள் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வர அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

livingston-family-photo

Also Read : லிவிங்ஸ்டன் திரைக்கதையில் மாஸ் பண்ணிய 4 முக்கியமான படங்கள்.. கமலுக்கே பெரிய ஹிட் கொடுத்துருக்காரே

Trending News