ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

73 வயதில் ரஜினிக்கு ஆக்சன் தேவையா.. ஜெயிலர் படமும் ஊத்திக்குமுன்னு சாபமிட்ட பிரபலம்

Actor Rajini: இந்த வயதிலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், இளம் நடிகர்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவர் நடிக்கும் ஜெயிலர் படம் ஊத்திக்குமுன்னு சாபமிட்ட பிரபலம் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

வயதானாலும் இன்னும் உன் ஸ்டைலும், அழகும் மாறவே இல்லை என்ற வசனத்திற்கு ஏற்ப இவர் செய்து வரும் காரியமும் அதே போல் தான் இருந்து வருகிறது. தற்பொழுது 73 வயது ஆகும் இவர் நடிக்கும் ஆசையை விடாது தொடர்ந்து நடத்து வருகிறார்.

Also Read: பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் 5 தமிழ் ஹீரோக்கள்.. கமலின் காலை வாரி விட்ட மோசமான அரசியல்

அதிலும் ஆக்சன் கதை கேட்டு படத்தில் முடியாமல் நடித்து வருகிறார். இவர் இவ்வாறு நடிப்பதற்கு காரணம் மக்களின் எதிர்பார்ப்பு தான் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் பொய் அப்படி பார்த்தால் இதுவரை தொடர்ந்து தோல்வி படங்களை தான் கொடுத்து வருகிறார்.

மேலும் பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து கொண்டு பேட்ட, அண்ணாத்த, தர்பார் போன்ற ஆக்சன் படங்களை வரிசை கட்டி நடித்து வந்தார். ஆனாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை, படும் தோல்வியை சந்தித்தது.

Also Read: நூதன முறையில் மோசடி வழக்கில் சிக்கிய மகாலட்சுமியின் கணவர்.. பிறந்தநாள் முடிந்த கையோடு ரவீந்தருக்கு கொடுத்த ஷாக்

இதை பார்க்கையில் இவர் ஆசையை தீர்த்துக் கொள்ளவே, இவர் ஆசைப்பட்ட மாதிரியும், மற்ற ஹீரோக்கள் நடிப்பதை பார்த்து பொறாமைப்பட்டு நானும் நடிக்கிறேன் என நடித்து தோல்வி அடைந்து வருகிறார். மேலும் இவரை நம்பி படம் எடுத்தவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

அதுபோல தான் தற்போது இவர் நடிப்பில் வெளியேவர இருக்கும் ஜெயிலர் படமும், கண்டிப்பாக மண்ணை கவ்வும். ரஜினி தொடர்ந்து இதுபோல காரியங்களை செய்து வருவது எனக்கு சிரிப்புதான் வருகிறது என வெளிப்படையாகவே பேசி வருகிறார் சவுக்கு சங்கர். இவரின் இத்தகைய பேச்சு ரஜினி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: முன்னாள் காதலியை காட்டி கதி கலங்க வைத்த 5 படங்கள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

Trending News