வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் நிகழ்ச்சி ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கிறதா? பரபரப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய தகவல்!

விஜய் டிவியில் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு 16 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் யார் என்ற போட்டி இனிமேல் தான் நடக்க உள்ளது.

இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் சமையல் அணியின் தலைவர் சின்னப்பொன்னு என்றும், வீடு சுத்தம் அணியின் தலைவர் பாவனி ரெட்டி என்றும், கழிவறை சுத்தம் செய்யும் அணியின் தலைவர் ராஜு என்றும், பாத்திரம் கழுவும் அணியில் தலைவர் நமிதா மாரிமுத்து என்றும் தேர்வு செய்துள்ளனர்.

தற்போது வரை சூடு பிடிக்காத பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இனி வரும் நாட்களில் காதல் டிராக், சண்டைக்காட்சி போன்றவற்றை ரசிகர்கள் காண்பதற்கு ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் A23 ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கிறதா? என்ற சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது.

ஏனென்றால் பொழுதுபோக்கிற்காக ஹாட்ஸ்டார் இல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது இடையில் ரம்மி விளையாட்டிற்கான விளம்பரம் இடம்பெறுகிறது. போதைப்பொருள், மது போன்றவற்றின் வரிசையில் ரம்மி விளையாடும் இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறது.

rummy-cinemapettai
rummy-cinemapettai

ஏனென்றால் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே ரம்மி விளையாட்டினால் பணத்தை இழக்கும் அபாயத்தை உணராத இளைய சமூகத்தினரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்க கூடாது என்பதே பலரது கருத்தாகும்.

எது எப்படி இருந்தாலும் எந்த நிகழ்ச்சியையும் பொழுதுபோக்கு கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும். அதில் இருக்கும் நல்லது கெட்டதை பிரித்தறிந்து பார்க்கும் பக்குவம் இருந்தால் எந்த ஆபத்திலும் சிக்கமாட்டோம், விளம்பரத்தை நம்பியும் ஏமாறமாட்டோம்.

Trending News