புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டான் படத்தின் முன்பதிவே இவ்வளவு வசூலா?.. முன்னணி நடிகர்களுக்கே ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி களைகட்டி வருகிறது. முதல் காட்சி ஆரம்பிக்கும் முன்பே ரசிகர்களின் கூட்டத்தால் பல திரையரங்குகளும் திணறிப் போய் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலாபிஷேகம், பட்டாசு என்று ரசிகர்கள் இதை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் டான் படத்தின் வசூல் சீனியர் நடிகர்களின் படங்களை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது படத்தை பார்த்த ரசிகர்களும் சிவகார்த்திகேயனின் நடிப்பை பாராட்டி பல பாசிட்டிவான விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக வெளியான பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் முதல் காட்சிக்குப் பிறகு கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதாக பல தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியோடு கூறி வருகின்றனர்.

அந்த வகையில் படத்தின் முன்பதிவே பலரையும் வியக்கும் வகையில் இருந்துள்ளது. முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டு ஹவுஸ்புல் ஆனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தான் இது போன்ற ஏகபோக வரவேற்பு கிடைக்கும். அதுவும் ரஜினியின் கபாலி, தர்பார், 2.o போன்ற படங்கள் முன் பதிவில் ஒரு கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் சிவகார்த்திகேயனின் இந்த டான் திரைப்படம் தற்போது முன்பதிவில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் பல வருடங்களாக முன்னணி நடிகர்களின் படங்கள் செய்த சாதனையை அசால்டாக செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பல முன்னணி நடிகர்களும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் சிறிது சிறிதாக தன்னுடைய வளர்ச்சியை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது அசுர வேகத்தில் முன்னேறி இருப்பது அவருடைய ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.

Trending News