சிவகார்த்திகேயனின் டான் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. இவருடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.
மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக சிபி சக்கரவர்த்தி காட்டியிருந்தார். இந்நிலையில் டான் படத்தின் வெற்றியால் அனைவராலும் சிபிச்சக்கரவர்த்தி அறியப்பட்டார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வந்துள்ளார்.
இயக்குனர் அட்லீயின் தெறி, மெர்சல் படங்களில் சிபிச் சக்கரவர்த்தி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் ஒரு சிறு காட்சிகளில் மட்டும் சிபிச்சக்கரவர்த்தி நடித்திருந்தார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தன்னுடைய முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற விடாமுயற்சியால் வெற்றி அடைந்துள்ளார். மேலும் இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த பட வாய்ப்பு எளிதில் சிபிச்சக்கரவர்த்தி கிடைக்கும் என பேசப்பட்டது. ஆனால் தற்போது அவர் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது ஒரு பட விழாவில் பேசுகையில் முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்களை மதிக்க வேண்டும். வெறும் பத்து நிமிடத்தில் எல்லாராலும் மிகச் சிறப்பாக கதை சொல்லி விட முடியாது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தர வேண்டும் அப்போதுதான் சொல்லவேண்டிய கதையை முழுமையாக சொல்ல முடியும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே பெரிய டாப் நடிகர்கள் தங்களது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்ற செய்திகள் சமீபகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. தற்போது சிபி சக்ரவர்த்தி இவ்வாறு கூறியிருப்பதால் இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.