வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரே நாளில் வசூலை அள்ளிய சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் செல்லும் டான் திரைப்படம்

சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படத்தை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. நேற்று வெளியான இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்கு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் காத்திருந்தனர்.

காலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் காட்சி முதற்கொண்டு அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடியது. அதுமட்டுமல்லாமல் டான் படத்தின் டிக்கெட் முன்பதிவும் அமோகமாக இருந்தது. அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது டான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் டான் திரைப்படம் நேற்று 9 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இல்லாத அளவுக்கு டான் திரைப்படத்திற்கு ஓபனிங் இருந்ததும் இந்த வசூலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே படத்தைப் பற்றிய அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அதை பொய்யாக்காமல் கனகச்சிதமாக திரைக்கதையை கொடுத்திருப்பதும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்.

வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரங்கு நிறைந்த ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த டான் திரைப்படம் தற்போது மற்ற பெரிய நடிகர்களையும் சிறு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending News