புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மூன்றே நாளில் போட்ட காசை எடுத்த சிவகார்த்திகேயன்.. டான் பட பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டான் திரைப்படம் இந்த மாதம் 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டான் படம் வெளியான முதல் 3 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலைக் குவித்திருக்கிறது என்பது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுகிறது. டான் திரைப்படம் திரைக்கு வந்த 13-ம் தேதியான முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 9.10 கோடியையும், இரண்டாவது நாளான சனிக்கிழமை அன்று 10.5 கோடியையும்,  3வது  நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று 11.15 கோடியையும், ஆக ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களில் 30.75 கோடியையும் பெற்றிருக்கிறது.

எனவே டான் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிபரம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் நிச்சயம் திரையரங்கில் மேலும் மேலும் ரசிகர் கூட்டத்தை வரவைத்து வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் திரையரங்குகள் 90 சதவீதத்திற்கும் மேல் டிக்கெட் விற்பனையாகியுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் சந்தோசத்தில் டான் திரைப்படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறது.

எனவே இந்தப் படம் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தை மையப்படுத்தி எடுத்திருப்பதால் இளைஞர்களும் குடும்பத்தினரும் ஆர்வத்துடன் திரையரங்கை நோக்கி படை எடுத்து வருகிறது. 35 முதல் 40 கோடி பட்ஜெட் படமான டான் திரைப்படம் மூன்றே நாட்களில் போட்ட காசை எடுத்து விட்டதால் இனி வருவது லாபம் மட்டுமே.

இதே வேகத்தில் அடுத்த 10 நாட்களில் படத்தின் வசூல் இருந்தால், விக்ரம் படம் ரிலீஸ் ஆகும் வரையிலும் டான் திரைப்படத்திற்கு எந்த தடையும் இல்லாமல் படம் ஓடும் என்றும் நிச்சயம் டாக்டர் திரைப்படம் போலவே 100 கோடிக்கு மேல் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News