புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டான் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வளைத்து போட்ட பிரபல டிவி.. பாதி படத்திலேயே பக்கா மாஸ் காட்டும் சிவகர்த்திகேயன்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றவர் சிவகார்த்திகேயன். நடிப்பைத் தாண்டி தயாரிப்பிலும் வேட்டையாடி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொள்வார். இதுதான் தொழில் நேக்கு என்று கூறுவார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் டான் என்ற படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரகனி, சூரி போன்ற பிரபலங்கள் நடிப்பில் இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து வெளியிடவுள்ளனர். 40% மட்டுமே முடிந்துள்ள இந்த படத்தின் ஜீ தமிழ் சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றியுள்ளது.

முன்பெல்லாம் படம் வெளிவந்து ஒரு வருடம் கழித்துதான் சின்னத்திரையில் வெளியிடுவார்கள். ஆனால் தற்போது பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே விற்று விடுகின்றனர்.

sivakarthikeyan-don-movie
sivakarthikeyan-don-movie

இது கதாநாயகன் மேல் பெரிய பெரிய முதலாளிகளுக்கு வைத்து இருக்கும் நம்பிக்கை என்றே கூறலாம். அடுத்த மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் விரைவில் படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News