தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து பிரபலமாக இருக்கும் ஒரு நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனம் தற்போது பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
படங்களை தயாரிப்பதோடு மட்டுமின்றி, விநியோகமும் செய்து வருகிறது. இதில் கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் லைகா புரொடக்ஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தை தற்போது அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனால் டான் திரைப்படத்தின் வியாபாரத்தை இன்னும் லைகா நிறுவனம் ஆரம்பிக்கவில்லை.
ஏனென்றால் லைகா தற்போது ராஜமௌலி இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ளது. மேலும் அவர்கள் இதை ஏரியா வாரியாக பிரித்து நல்ல விலைக்கும் விற்று உள்ளார்கள்.
இந்நிலையில் இவர்களின் சொந்த தயாரிப்பான டான் திரைப்படத்தை ஏன் இன்னும் வியாபாரம் செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால் அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
அதன் காரணமாக லைகா நிறுவனம் டான் படத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்க்கலாம் என்று கணக்குப் போட்டுள்ளது. அதனால் தான் லைகா, ஆர்ஆர்ஆர் படத்தில் மட்டுமே தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி பார்த்தால் டான் திரைப்படம் வெளியாக கொஞ்சம் தாமதமாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.