அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் பதவி.. ஜனநாயக கட்சியை எதிர்த்து குடியரசு கட்சிக்கு கிடைத்த வெற்றி

donalad trump
donalad trump

Donald Trump: அமெரிக்காவில் நேற்று மாலை தொடங்கிய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் இன்று காலை வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டது. அதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.

தற்போது தேர்தல்கள் முடிவான நிலையில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றியை அடைந்திருக்கிறார். அதாவது இவரது போட்டியாளரான ஜனநாயக கட்சியின் அதிபர் கமலா ஹாரிசை விட குடியரசு கட்சிக்கு ஆதரவாக நின்ற ட்ரம்ப் அதிக வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியை அடைந்திருக்கிறார். அந்த வகையில் அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவி ஏற்கிறார்.

வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்கும் டொனால்ட் டிரம்ப்

மேலும் இரண்டு முறை அதிபர் பதவியை வெற்றிகரமாக தக்க வைத்த பெருமை ட்ரம்புக்கு உண்டு. இதே மாதிரி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் இரண்டு முறை அதிபராக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவரை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்து, அதன் பிறகு ஒரு தோல்வியை சந்தித்து மறுபடியும் அதிபராக வெற்றி பெற்று தற்போது வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்.

இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு புளோரிடாவில் பேசிய டொனால்ட் இந்த முறை எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் அமெரிக்காவின் மேன்மைக்காக கடுமையாக உழைத்து கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடி வெற்றியை கடைப்பிடிப்பேன் என்று சொல்லி இவருக்கு ஆதரவு அளித்த அமெரிக்கா மக்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner