புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கண்ட நாயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்.. தயாரிப்பாளரை கோபப்பட்டு திட்டிய அஜித்..!

Actor Ajith: அஜித் ஒரு ஜென்டில்மேன் என அனைவருக்கும் தெரியும். அவருடன் இணைந்து நடிக்கும் நடிகைகள் கூட இப்படித் தான் அவரை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து கூறுவார்கள். அப்படிப்பட்டவர் பிரபல தயாரிப்பாளரை நாய் என்று திட்டி இருக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.

ஒருமுறை தயாரிப்பாளரும், இயக்குனருமான கே ஆர், அஜித் குறித்து தன் விமர்சனத்தை முன் வைத்தார். அதாவது அஜித் எப்போதுமே ரேஸ், ரேஸ் என்று போய்விடுகிறார். அதனால் அவருக்கு ஏதாவது நடந்தால் அவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களின் கதி அவ்வளவு தான்.

அவர்களுக்கு யார் பதில் சொல்வார்கள். இதை மனதில் வைத்து அஜித் இந்த ரேஸை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அஜித் இந்த விமர்சனத்திற்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பதிலடி கொடுத்திருந்தார்.

Also read: வாடி வாசலுக்கு ஆப்பு வைக்கும் அஜித்.. சிக்னல் கொடுத்ததும் சிட்டாக பறந்த முதலாளி

அதாவது என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். கண்ட நாயெல்லாம் அட்வைஸ் செய்ய வேண்டாம் என எதைப் பற்றியும் யோசிக்காமல் வார்த்தையை விட்டிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் மிகப் பெரிய அளவில் பரப்பரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அதை அடுத்து அஜித்தை வருத்தம் தெரிவிக்க சொன்னபோது கூட அவர் முடியாது என்று ஒரேடியாக மறுத்துவிட்டாராம். இப்படி எல்லாம் மனதில் பட்டதை ஓப்பனாக பேசும் அஜித் பிறகு ஏன் பேட்டி கொடுப்பதையோ பொது விழாக்களில் கலந்து கொள்வதையோ தவிர்த்து வருகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றலாம்.

சோசியல் மீடியா பிரபலமாகாத அந்த காலகட்டத்தில் அஜித் பேட்டி கொடுப்பது வேறு மாதிரி திரித்தும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. அப்படித்தான் தயாரிப்பாளரை அவர் நாய் என்று திட்டிய சம்பவம் கூட பரபரப்புக்காக திரித்து போடப்பட்டதாக அந்த காலத்தில் ஒரு செய்தி உண்டு. இதனாலேயே அஜித் இப்போது ஒரு ஞானி மாதிரி அனைத்திலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.

Also read: அஜித்துக்கே டஃப் கொடுக்கும் மக்கள் செல்வன்.. 12 கிலோ குறைத்து பிட்டாக மாறிய விஜய் சேதுபதியின் வைரல் போட்டோ

Trending News