செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நீ அந்த ரெண்டு ஹீரோக்களை வச்சு படம் எடுக்க வேண்டாம்.. வாரிசுக்கு விஜய் போட்ட கட்டளை

Vijay son Sanjay As director: விஜய் மகன் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென பல இயக்குனர்கள் கேட்டு வந்தனர். ஆனால் சஞ்சய் இயக்குனருக்கு படித்து வருவதால் அவர் நடிப்பதை விரும்பவில்லை. இதனை பல இயக்குனர்களிடம் விஜய் நாசுக்காக அது அவனது விருப்பம் என கூறி வந்தார். இந்த நிலையில் விஜய் திடீரென அரசியல் கட்சி தொடங்குவது உறுதியானது அதற்கான வேலைகளையும் வேகவேகமாக செய்து வருகிறார்.

கூடிய விரைவில் கட்சி பெயரை அறிவிக்கக்கூடும். ஆனால் இவர் அரசியல் கட்சிக்கு வருவது இவரது மனைவிக்கும், மனைவி குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லையாம். எப்படி இருக்கும் நிலையில் எதை சொன்னாலும் விஜய் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருந்து வருகிறார். இதனை தடுக்க விஜய் மனைவி புதுவித யோசனை செய்து தன் மகனை விஜய்க்கு எதிராக திரையுலகில் இறங்க வைக்கிறார்.

Also Read : விஜய் மகன் சஞ்சய் நடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் 5 பிரபலங்கள்.. நிராகரித்த முக்கிய காரணம் இது தான்

விஜய் மகன் சஞ்சய் படம் இயக்கப் போகிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிப்பும் வெளிவந்தது. விஜய் கேட்காமலேயே இந்த செயல்கள் நடந்து வருகிறது. சஞ்சய் இயக்கும் படத்தில் யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது அதில் அதர்வா, ஹரிஷ் கல்யாண், கவின் என மூன்று பேரும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது திடீரென விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பார் என கூறப்படுகிறது. விஜய் அடையாளத்தில் சஞ்சய் படம் இயக்குகிறார். இதில் நடிப்பவர் துருவிக்ரம் என்றால் அவரும் ஒரு வாரிசு நடிகர். இசையமைப்பது ஏ.ஆர். ரகுமான் மகன் அவரும் பிரபலத்தின் வாரிசு இப்படி மூன்று பேரும் சேர்ந்து ஒரு படத்தை வெற்றி பெற வைத்தால் அதை என் மகனுக்கு பெருமை சேர்க்காது. ஆனால் இப்பொழுது வரை விஜய் அமைதியாக இருந்து வருகிறார்.

Also Read : ஒவ்வொரு விஷயத்திலும் விஜய்யை பாலோ பண்ணும் மகன் சஞ்சய்.. அதுக்குன்னு இதுலயுமா?

வாரிசுகள் மட்டுமே படம் முழுவதும் இருந்தால் நெப்போடிசம் என்ற வலையில் மகன் சிக்கிக் கொள்வான். அதனால் புதுமுக நடிகர்கள் அல்லது கவின் மாதிரி உள்ள நடிகர்களை வைத்து படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். வாரிசு நடிகர்கள் வேண்டாம், அதை மீறி செயல்பட்டால் படத்தை இயக்க விஜய் விடமாட்டார் என்று கூறப்படுகிறது.

இத்தனை வருடத்தில் விஜய் தன் அப்பா இயக்குனர் என்ற எண்ணத்தில் இந்த படத்திலும் நடித்ததில்லை. இப்பொழுது வரை விஜய் நடிக்கும் படங்களில் தன் திறமையை மற்றும் பணிவு இந்த இரண்டையும் கொண்டு தான் வளர்ந்து வருகிறார். அதேபோல் தன் மகனும் தன் வாரிசு என்ற நினைப்பில் வளராமல் அவன் திறமையில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

Also Read : இந்த 6 சினிமா பிரபலங்களுக்கு இடையே இப்படி ஒரு உறவா.? அருண் விஜய்க்கு தம்பி முறையாகவும் சஞ்சீவ்

Trending News