வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஆரம்பத்திலேயே லோகேஷ் கொடுக்க உள்ள ட்ரீட்.. லியோவில் இத மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!

Leo Lokesh Vijay: இப்போது எங்கு பார்த்தாலும் லியோ படத்தின் போஸ்டர் தான் மையம் கொண்டிருக்கிறது. இன்னும் லியோ படம் வெளியாக ஒரு வார கால அவகாசம் கூட இல்லை. ஏற்கனவே ரசிகர்கள் இந்த படத்தை கழுகு போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஹைபை ஏற்ற லோகேஷ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

மேலும் லியோ படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்தின் டிரைலர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்கள் கவனிக்கப்பட்டதால் பல சாதனைகளையும் முறியடித்து இருக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தை பற்றி லோகேஷ் கொடுக்கும் பேட்டி மூலம் சுவாரசியமான தகவல் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தில் இந்த பகுதியை யாரும் மிஸ் பண்ணி விடாதீர்கள் என்று லோகேஷ் ஒரு ட்ரீட் கொடுத்து இருக்கிறார். சமீபகாலமாக வெளியாகும் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் சுவாரசியமாக வைத்து வருகிறார்கள்.

ஜெயிலர் படத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சி அட்டகாசமாக அமைந்தது. ஆனால் லோகேஷ் எப்போதும் போல தனது லியோ படத்திலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். அதாவது ஆரம்பத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டால் படம் முழுக்க அவர்களை திருப்தி படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்படிதான் லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை யாரும் மிஸ் பண்ணிடாதீர்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கூறியிருக்கிறார். ஏனென்றால் படம் முழுக்க பல்லாயிர பேர் வேலை பார்த்தாலும் அந்த முதல் பத்து நிமிட காட்சியை எடுக்க மட்டும் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்து உள்ளார்களாம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு அந்த காட்சி பிடிக்கும் என்றும் லோகேஷ் உறுதி அளித்துள்ளார்.

ஆகையால் சில நிமிடம் கூட தாமதிக்காமல் லியோ படத்தின் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு லோகேஷ் கூறியதில் இருந்து தெரிய வருகிறது. மேலும் லியோ படம் எல்சியுவில் இடம்பெறுமா என்ற குழப்பமும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. ஆகையால் எல்லா கேள்விக்கும் அக்டோபர் 19 விடை தெரிந்துவிடும்.

Trending News