செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித் விஷயத்தில் மூக்க நுழைக்காதிங்க.. விஜய் போட்ட கண்டிஷன்

தற்போது விஜய் வாரிசு படப்பிடிப்பில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.இப்படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வருகிறது.இப்படத்தில் ராதிகா மந்தனா, சரத்குமார், குஷ்பு, பிரபு, சங்கீதா என ஏராளமான திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் அடுத்த படம் மாபெரும் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் விஜய். எப்போதுமே விஜய்க்கு போட்டியாக பார்க்கப்படும் மற்றொரு நடிகர் அஜித்.

Also Read :9 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. விஜய்க்காக தயாராகும் 100வது படத்தின் கதை

இவர் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்திற்கு போட்டியாக ஏகே 61 படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நேரத்தில் விஜய் தனது மேனேஜருக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அதாவது அவரது மேனேஜர் ஜெகதீஷை அழைத்து உங்களுக்கு வினோத் மற்றும் போனி கபூரை நன்கு தெரியும். மேலும் நீங்கள் அடிக்கடி அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் நேரிடும். அந்த சமயத்தில் அவர்களிடம் பேசும்போது நம் படத்தை பற்றியோ அல்லது அவர்கள் படத்தை பற்றியோ எதுவும் பேச வேண்டாம்.

Also Read :விஜயுடன் மோத பயந்த அஜித்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா ?

அதுமட்டுமின்றி அவர்கள் படம் பொங்கலுக்கு வெளியாகிறதா என்று கூட கேட்க வேண்டாம் என்று விஜய் கட்டளையிட்டுள்ளார். இதற்கு காரணம் இப்படி ஏதாவது கேட்டால் அவர்கள் நம்மை பற்றி தவறாக நினைக்கக்கூடும். மேலும் அவர்கள் படம் போட்டியாக வருவது நமக்குப் பிடிக்கவில்லை என்று கூட நினைப்பார்கள்.

அவர்களின் படத்தை பற்றி அறிய நாம் ஆர்வமாக இருக்கிறோம் என்று என்ன கூடும். இதனால் படத்தைப் பற்றி பேசாமல் சாதாரணமாக நலம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்பது போல விஜய் கூறியுள்ளாராம். இதைக் கேட்டு விஜய்யின் மேனேஜர் மற்றும் அவரது நட்பு வட்டாரம் விஜய் சொன்னது போல நடந்து வருகிறார்கள்.

Also Read :விஜய்க்கு மனைவியாக நடிக்கும் அழகு நடிகை.. வில்லியாக களமிறங்கும் சமந்தா

Trending News