வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நயன்தாரா மட்டும் வேண்டவே வேண்டாம்.. பட்ட அவமானத்திற்கு 7 வருடங்களாக பழி வாங்கும் ஸ்டைலிஷ் ஹீரோ

A hero who hates Nayanthara: தமிழ் சினிமாவை பொறுத்தவரை நயன்தாராவை ஒரு லக்கி ஹீரோயின் ஆக பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பார்த்து வருகிறார்கள். அத்துடன் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் பலரும் இருக்கிறார்கள். அத்துடன் நயன்தாராவே ஹீரோயினாக போடுங்கள் என பல நடிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் வாரிசு நடிகர் ஒருவர் மட்டும் நயன்தாரா வேண்டவே வேண்டாம் என திட்டவட்டமாக கூறி வருகிறார். இவர் இந்த படத்தில் ஹீரோயினாக இருந்தால் நான் நடிக்க விரும்பவில்லை என போடும் முதல் கண்டிசனை இதுதான். அப்படியே சொல்லி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக நயன்தாராவுக்குடன் இணைந்து நடிக்கவே இல்லை.

இடைப்பட்ட காலத்தில் ஒரு படம் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கூட அந்த நடிகர் ரொம்பவே பிடிவாதமாக இருந்ததால் நயன்தாராவிற்கு பதிலாக வேறு ஹீரோயினை போட்டு படத்தை எடுத்தார்கள். அப்படி பிடிவாதமாக இருக்கும் ஸ்டைலிஷ் ஹீரோ யார் என்றால் அல்லு அர்ஜுன். அதாவது இவர் 2016 ஆம் ஆண்டு அவார்டு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

Also read: நயன்தாரா மார்க்கெட்டை உடைத்து த்ரிஷா கையில் மாட்டிய 5 மெகா பட்ஜெட் படங்கள்.. தலை சுற்ற வைக்கும் சம்பளம்

அப்பொழுது நயன்தாராவிற்கு நானும் ரவுடி தான் படத்துக்கு பெஸ்ட் ஹீரோயின் அவார்ட் கிடைத்தது. அதற்காக அவார்ட் கொடுப்பதற்காக அல்லு அர்ஜுனாவை தான் மேடைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். அல்லு அர்ஜுனாவும் நயன்தாராவிற்கு அவார்ட் கொடுப்பதற்காக மேடையில் ஏறி இருக்கிறார். ஆனால் அவர் கொடுக்கும் பொழுது நயன்தாரா, இதற்கு முக்கிய காரணம் விக்னேஷ் சிவன் தான். அதனால் அவர் கையால் தான் நான் இந்த அவார்டை வாங்க ஆசைப்படுகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

அப்பொழுது இரண்டு பேரும் காதலித்து வந்ததால் விக்னேஷ் சிவனை பெருமையாக பேசி அல்லு அர்ஜுனாவை அவமானப்படுத்தி விட்டார். இந்த ஒரு விஷயத்தை சாதாரணமாக அல்லு அர்ஜுனவால் எடுக்க முடியாததால் நயன்தாராவை மொத்தமாக வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். அதனால் தற்போது வரை நயன்தாரா பக்கமே திரும்பாமல் ஒதுங்கியே வருகிறார்.

Also read: பிசினஸில் நயன்தாராவை மிஞ்சிய அனிருத்.. சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட தொழில்

Trending News