வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் டிவியில் 5 சீரியலில் நடிக்கும் டோரா புஜ்ஜி.. சிறகடிக்கும் ஆசை மூலம் பிரபலமான ஜீவா

Sirakadikkum Asai Jeeva: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது சிறகடிக்கும் ஆசை தான். இதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எதார்த்தமான நடிப்பையும் மக்களை கவரக்கூடிய கதையும் இருப்பதால் இதுக்கு ஏக்கச்சக்கமான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.

அப்படிப்பட்ட இந்த நாடகத்தில் தற்போது கதையின் திருப்பமாக ரீ என்ட்ரி கொடுத்திருப்பது ஜீவா. அதாவது முதலில் மனோஜுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து கனடாவில் செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவு எடுத்திருந்தார்கள். அதன் காரணமாக வீட்டுக்கு தெரியாமல் மக்கு மனோஜ் 27 லட்சம் பணத்தை எடுத்து ஜீவாவிடம் கொடுத்து விட்டார்.

உடனே ஜீவா இது தான் சான்ஸ் என்று அந்த படத்தை தனியாக சுருட்டி கொண்டு கனடாவிற்கு போய்விட்டார். தற்போது இந்த பணம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனோஜை ஏமாற்றி கல்யாணம் பண்ண ரோகினி, ஜீவாவை தேடிக்கொண்டு அழைக்கிறார். அதன் வாயிலாக கனடா ரிட்டனாக ஜீவா, டோரா புஜ்ஜி மாதிரி கெட்டப்பில் என்டரி கொடுத்திருக்கிறார்.

ஜீவா முதன் முதலில் நடித்த சீரியல்

அந்த வகையில் இவரை வைத்து கதை தற்போது விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட ஜீவாவின் பற்றிய சில தகவல்களை தற்போது பார்க்கலாம். அதாவது இவருடைய பெயர் அட்சய பாரதி. சொந்த ஊர் ஓசூர், கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த பொழுது இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் கொடுக்காததால் இன்டீரியர் டிசைனிங் வேலையை பார்ப்பதற்காக பெங்களூரில் மூன்று வருடமாக வேலை பார்த்திருக்கிறார். அந்த வகையில் மீண்டும் பெற்றோர்களிடம் பிடிவாதமாக பேசி புரிய வைத்து தற்போது சீரியல் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அப்பொழுது இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருக்கிறார்.

அதன் பின் இப்பொழுது பொன்னி சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறகடிக்கும் ஆசை, முத்தழகு மற்றும் சின்ன மருமகள் போன்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்டீரியர் டிசைனிங் வேலையை பார்க்கும் பொழுது இவருக்கு மாதம் 35000 முதல் 40000 வரை சம்பளமாக கிடைத்தது.

ஆனால் தற்போது சீரியல் நடிக்க வந்த பிறகு ஒரு நாளைக்கு 3000 ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார். மேலும் சிறகடிக்கும் ஆசை சீரியல் மூலம் தான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறார். இதனைத் தொடர்ந்து வரக்கூடிய எந்த கதாபாத்திரத்தையும் மிஸ் பண்ணாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Trending News