வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக் பாஸில் தொடரும் டபுள் எவிக்சன் .. அனன்யாவை தொடர்ந்து 75 நாள் கழித்து வெளியேரும் டம்மி பீஸ்

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மற்ற சீசன்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. முதல் வாரத்திலேயே எவிக்சன், டிஆர்பி கொடுத்துக் கொண்டிருந்த போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது, 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள், பூகம்பம் டாஸ் மூலம் வெளியே போன இரண்டு போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வந்தது என எல்லாமே வித்தியாசம் தான்.

இந்நிலையில் போட்டி தொடங்கி 75 நாள் முடிவடைந்திருக்கும் நிலையில் நேற்று மிட் வீக் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் அனன்யா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் டபுள் எவிக்சன் நடந்துவிட்டது. இதில் யுகேந்திரன் மற்றும் வினுஷா வெளியேறினார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் இந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெறுகிறது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு நிக்சன் வெளியேறி இருக்க வேண்டியது. ஆனால் சென்னையை பாதித்த மழை வெள்ளத்தை காரணம் காட்டி ஓட்டு அதிகமாக போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று சொல்லி நிக்சனை காப்பாற்றி விட்டார்கள். இது பிக் பாஸ் போட்டியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

Also Read:பூர்ணிமாவை வைத்து புது வியூகம் போடும் அர்ச்சனா.. இரண்டாக உடையும் Bully Gang

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் நடக்காததால், இந்த வாரம் டபுள் எவிக்சன் என்பது எல்லாம் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்த நிலையில் இன்னும் வீடு முழுக்க போட்டியாளர்கள் இருந்தால் நிகழ்ச்சி தரப்பினர் இரண்டு பேரை அல்ல, ஒரே வாரத்தில் மூன்று பேரை வெளியேற்றவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

மீண்டும் நடக்க இருக்கும் டபுள் எவிக்சன்

இந்த வகையில் அனன்யாவை தொடர்ந்து தற்போது கூல் சுரேஷ் வெளியேற இருப்பதாக தெரிகிறது. அனன்யாவுக்கு அடுத்து குறைந்த அளவில் ஓட்டுகள் பெற்றிருப்பது கூல் சுரேஷ் தான். அதனால் தான் அவரை வெளியேற்ற இருக்கிறார்கள். கூல் சுரேஷ் 75 நாட்கள் வீட்டில் இருந்ததே மிகப்பெரிய விஷயம். இவர் எப்படித்தான் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்கிறார் என எல்லோருக்குமே சந்தேகம் இருந்து வந்தது.

சில தினங்களுக்கு முன் கூல் சுரேஷ் பிக் பாஸ் சுவரை எகிறி குதித்து வெளியே தப்ப முயன்று இருந்தார். அவரை பிக் பாஸ் அழைத்து பேசி இருந்த நிலையில் தற்போது இந்த எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் கமலஹாசன் கூல் சுரேஷ் நீங்கள் இந்த வீட்டில் பங்களிப்பே இல்லாத போட்டியாளர் என கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read:இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்.. அனன்யா விஷயத்தில் பிக் பாஸ் செய்தது சரியா?

Trending News