வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷ் இனிமேல் அக்கட தேசத்தில் படம் வெளியிடுவது சந்தேகம்.. வாத்தி பட பிரமோஷனில் ஏற்பட்ட சர்ச்சையான பேச்சு

சமீப காலமாகவே தமிழ் நடிகர்கள் மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் இப்பொழுது தனுஷ் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக கால் பதித்துள்ளார். இயக்குனர் வெங்கி அட்லூரி எழுதி, இயக்கி வரவிருக்கும் வாத்தி திரைப்படம். இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வர இருக்கிறது.

மேலும் வாத்தி படத்திற்காக பிரமோஷன் ஆந்திராவில் நடைபெற்றது. அதில் தனுஷ் எனக்கு தெலுங்கு தெரியாது நான் தமிழ் பேசுகிறேன் என்று தமிழில் பேசினார். இதனால் அங்கே இருந்த கூட்டத்தில் ரசிகர்களிடமிருந்து சலசலப்பு ஏற்பட்டு விட்டது. இந்த சலசலப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழில் பேசி இருக்கிறார்.

Also read: 2025 வரை பிஸியாக இருக்கும் வாத்தி தனுஷ்.. அடுத்தடுத்த வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்

இதனால் அங்கு இருந்த தெலுங்கு ரசிகர்கள் எங்களுக்கு தமிழ் புரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து தனுஷ் அங்கே ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வாத்தி பட பிரமோஷன் நடைபெற்று முடிந்து விட்டது.

ஆனால் தற்பொழுது ஆந்திராவில் உள்ள ரசிகர்கள், தனுஷ் ஒரு தெலுங்கராக இருந்து கொண்டு அது எப்படி தெலுங்கு தெரியாது என்று சொல்லலாம் என சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அங்குள்ள ரசிகர்கள் தற்பொழுது தனுஷ்க்கு எதிராக கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் தனுஷின் பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு தான்.

Also read: டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

அதனால் அவருக்கு தெலுங்கு தெரியாமல் போய்விட்டது. ஆனால் அதை ரசிகர்கள் புரிந்து கொள்ளாமல் இந்த மாதிரி பேசி வருகிறார்கள். இதனால் தனுஷின் வாத்தி படம் தெலுங்கில் எந்த மாதிரியான ரியாக்ஷன் கொடுக்கும் என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளதால் அதற்கு பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இப்படி தனுஷ் தொடர்ந்து தெலுங்கில் வெற்றி பெறலாம் என்று அங்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆனால் அப்படி நினைத்த தனுஷுக்கு இது ஒரு முதல் அடியாக ரசிகர்கள் இடையே சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். இதையெல்லாம் கடந்து அவருடைய வாத்தி படம் மற்றும் அடுத்து உருவாக இருக்கும் தெலுங்கு படம் அங்கே வெற்றி அடையுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: வெறித்தனமாக வெளியான வாத்தி பட போஸ்டர்.. தளபதியுடன் மல்லுக்கு நிற்கும் தனுஷ்

Trending News