வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

டிஆர்பி-யில் டாப் 6 சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிய ஆட்டநாயகன்

Top 6 serials in TRP: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எந்த சீரியல்கள் மக்கள் மனதை கவர்கிறது என்பதை அந்த வாரம் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்து விடும். அப்படி இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் படி டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த சீரியல்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில் கலெக்டர் ஆனாலும் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லாத அளவிற்கு ஒவ்வொரு நாளும் போராடி வருகிறது சுந்தரி சீரியல். தற்போது தமிழ் என்னுடைய குழந்தை நீ வெறும் ஆயா வேலை மட்டும்தான் பார்த்துட்டு வருகிறாய் என்று கார்த்திக், சுந்தரியின் வீட்டுக்குள் வந்து தமிழுடன் உறவாடி வருகிறார். மேலும் தமிழின் பிறந்த நாளில் கார்த்தி தான் உண்மையான அப்பா என்று கூறப்போகிறார். அப்படி தமிழுக்கு உண்மை தெரிந்து விட்டால் எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கும் என்பது பரபரப்பான கதையுடன் நகர்ந்து வருகிறது. தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் 6.98 இடத்தை பெற்று ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் பொன்னி விரித்த வலையில் துளசி மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார். அத்துடன் அண்ணனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மறைமுகமாக வச்சு வைத்தியம் பார்த்து வருகிறார். ஆனாலும் துளசியை இன்னும் அவமானப்படுத்த வேண்டும் என்று பொன்னி தொடர்ந்து பல வழிகளில் திட்டம் தீட்டி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.41 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக ஆரம்பத்தில் முதல் இடத்தில் இருந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் போகப் போக மூன்றாவது இடத்திற்கு போனது. ஆனால் இப்பொழுது தர்ஷினியின் கல்யாணம், குணசேகரின் அராஜகம் என பல வாரங்களாக இழுத்து அடித்த நிலையில் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்னாடி போய்விட்டது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் 8 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது.

இதற்கு அடுத்ததாக விஜய் டிவியில் இந்த ஒரு நாடகம் தான் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு ஆட்டநாயகனாக ஜெயித்துக் கொண்டு வருகிறது சிறகடிக்கும் ஆசை சீரியல். கடந்த சில வாரங்களாக நான்காவது இடத்தில் இருந்த இந்த சீரியல் தற்போது மக்களின் பேவரட் நாடகமாக இடம் பிடித்ததால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் 8.18 புள்ளிகளை பெற்று ஜெயித்துக் கொண்டு வருகிறது.

அடுத்ததாக வழக்கம்போல் கயல் சீரியல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டு 9.05 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எளிதில் பல வருட காதல் நிறைவேறும் விதமாக இந்த வாரம் முழுவதும் கயல் எழிலுக்கு நிச்சயதார்த்தம் திருமணம் என ஒட்டுமொத்த குடும்பமும் குதூகலத்துடன் இருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்க்காத விதமாக கயிலின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக சில அசம்பாவிதங்கள் நடைபெற இருக்கிறது.

இதற்கு அடுத்ததாக எப்போதுமே சிங்கப்பெண் இடம் மோதவே முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப 9.26 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனந்திக்கு அன்புவும் அழகனும் ஒன்னு தான் என்ற உண்மை தெரிய வருமா? அல்லது சூழ்ச்சி வலையில் சிக்கிய பொழுது மகேஷ் உடன் ஏற்பட்ட அசம்பாவிதம் தெரிய வந்துவிட்டால் ஆனந்தி எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் கதை நகர்ந்து வருகிறது.

Trending News