தென் ஆப்பிரிக்கா நாட்டில் இதுவரை இந்திய அணி ஒரு தொடரை கூட வென்றதில்லை. ஆனால் நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் ஒன்று இந்தியாவும், மற்றொன்றில் தென்னாப்பிரிக்க அணியும் வென்றுள்ளது.
ஆம்லா, டுபிளஸிஸ், டிவில்லியர்ஸ் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத தென்னாப்பிரிக்கா அணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்ட இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது.
இதனால் கேப் டவுன் டெஸ்டில், எப்படியாவது வென்றால் தான் இந்திய அணி தொடரை கைப்பற்ற முடியும். அதனால் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி பயிற்சி செய்து வருகிறது. அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வீரர்களுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.
ஒவ்வொரு வீரரும் தலா 50 பந்துகளை சந்தித்தே ஆக வேண்டும். அப்படி அவர்கள் சந்திக்கும் பட்சத்தில், பந்தானது எப்படி ஸ்விங் ஆகிறது, பேட்டுக்கு எப்படி வருகிறது என்பதை கணிக்க முடியும்.
டாப் ஆர்டரில் விளையாடும் 3 வீரர்களாவது தலா 50 பந்துகளை எதிர்கொண்டால், பந்தும் பழுசாகிவிடும். அதன் பின்னர் வரும் வீரர்கள் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும். பயிற்சியாளரின் இந்த யுக்தி மூலம் பின்வரிசையில் இறங்கும் ரிஷப் பண்ட் போன்றவீரர்கள் எளிதாக விளையாட முடியும். டிராவிட்டின் இந்த புது முயற்சியை வீரர்கள் கடைபிடித்தால் நிச்சயம் வெற்றி நமக்கே.