சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் ஆடம்பரமான வாழ்க்கைக்காக ஆசைப்படுவது வாடிக்கையான விஷயம் தான். இப்படி கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை பார்த்த நடிகைகளில் பலர் உண்டு. அதில் போதைக்கு அடிமையாகி குடித்து சொத்துகளை விட்ட நடிகைகளை தற்போது பார்க்கலாம்.
சாவித்திரி: இவருக்கு மகாநதி சாவித்திரி, நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரும் உண்டு. நடிப்பைத் தாண்டி பின்னணிப் பாடல் பாடுவது நடனம், இயக்கம், தயாரிப்பு என்ற அனைத்தையும் கைதேர்ந்தவர் என்றே கூறலாம். 1950-60களில் உச்சத்திலிருந்தார் நடிகை சாவித்திரி.
![](https://www.cinemapettai.com/wp-content/uploads/2018/03/Savithri-Gemini-Ganesan.jpg)
ஆடம்பர வாழ்க்கை, சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காக வெளிநாட்டு கார்கள் நிறைய வாங்கியுள்ளார். பங்களாவில் நீச்சல்குளம் கட்டிய முதல் நடிகை என்ற பெயரும் உண்டாம். காதல் மன்னன் ஜெமினி கணேசனை திருமணம் கூட செய்து கொண்டார். சொந்த படங்களை எடுத்து நஷ்டமானதால் போதைக்கு அடிமையாகி படத்தில் சம்பாதித்த சொத்துக்களை இழந்தார்.
கலர் பட காஞ்சனா: 1960களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் காஞ்சனா முக்கியமான இடத்தில் இருந்தார். காதலிக்க நேரமில்லை, அதே கண்கள், சாந்தி நிலையம் போன்ற படங்களின் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு தான் வருகிறது. அப்போது உள்ள பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டுள்ளார்.
சினிமாவை தாண்டி ஏர் ஹோஸ் ஸ்டராக வேலையும் பார்த்துள்ளார் காஞ்சனா. இவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானாதால் இவரது சொத்துக்களை இவர் சொந்தக்காரர்களே ஆட்டையை போட்டு விட்டனர்.
![kaanjana](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/kaanjana.jpg)
ஸ்ரீவித்யா: 40 வருட கால தமிழ் சினிமாவில், 800 படங்களுக்கு மேல் நடித்தவர் ஸ்ரீவித்யா. இவர் ஒரு பின்னணி பாடகியும் தான். தளபதி படத்தில் ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தவர் என்றே கூறலாம். பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீ வித்யா குணச்சித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இவர் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை இவர் கணவரே அழித்தார், கடைசி காலத்தில் புற்றுநோயால் மறைந்தார்.
![sri-divya](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/sri-divya.jpg)
சில்க் ஸ்மிதா: கவர்ச்சி என்ற பெயருக்கு முழு உதாரணமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருக்கு ஏற்பட்ட கெட்ட சவகாசம் காரணமாக தனது சொத்துக்களை இழந்துள்ளார். பின் இதனால் கடன் அதிகமாகி தற்கொலை செய்துள்ளார். சில்க் ஸ்மிதாவுக்கு நல்ல குணம் என்னவென்றால் கஷ்டப்படுபவர்களை தேடிப்போய் நிறைய உதவிகள் செய்துள்ளாராம்.
![silk-smitha-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2020/10/silk-smitha-cinemapettai.jpg)
இப்படி சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை போதைக்கு அடிமையாகி அல்லது கூடவே இருந்து குழி பறித்து சொத்துக்களை அபகரித்தவர்கள் நிறைய பேர் உண்டு.