மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மொழி கடந்தும் பல நாடுகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.
மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். ஜீது ஜோசப் இந்த படத்தை இயக்கியிருந்தார். திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் கூட சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
திரிஷ்யம் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், சைனீஸ் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திய மொழிகளில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டது.
அதாவது குற்றம் செய்த அவருக்கு தண்டனை கிடைக்காமல் மறைத்து விடுவார்கள். ஆனால் சைனாவில் அப்படி படம் எடுக்கக்கூடாது என ஒரு கண்டிஷன் உள்ளதாம். குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதை கடைபிடித்து வருகின்றனர்.
இதனால் சைனீஸ் மொழியில் ரீமேக்கான திரிஷ்யம் படத்தில் கடைசியில் ஹீரோ குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றுக் கொள்ளுமாறு எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தை ரீமேக் செய்யவும் பல மொழிகளில் போட்டிகள் நடந்து வருகின்றன.
அதில் தெலுங்கு மொழி முந்திக்கொண்டு படத்தை மொத்தமாக முடித்து விட்டது. விரைவில் OTT இணையதளத்தில் வெளியாகும் என தெரிகிறது.