திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

த்ரிஷ்யம் 3 கிளைமாக்ஸ் ரெடி.. த்ரிஷ்யம் 2 ரிலீஸான இரண்டாவது நாளே தூது விட்ட இயக்குனர்

2013ஆம் ஆண்டு த்ரிஷ்யம் என்ற படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா இடத்திலும் சூப்பர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் த்ரிஷ்யம் 2 படம் வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் முதல் பாகத்தை விட சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் தற்போது திரிஷ்யம் 2 படமும் அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது.

ஹாலிவுட் படங்களில் ஒரு கதையை பல படமாக எடுப்பது போல தற்போது மலையாள சினிமாவில் த்ரிஷ்யம் படத்தை பல படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அந்த வரிசையில் அடுத்ததாக த்ரிஷ்யம் 3 திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது.

drishyam3-cinemapettai-01
drishyam3-cinemapettai-01

அதற்கேற்றாற்போல் த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டியில் திரிஷ்யம் 3 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் உருவாக்கி விட்டதாகவும், அது மோகன்லாலுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே உருவான நிலையில் அதனை எப்படி விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற திரைக்கதையை இனிமேல் தான் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ஜீத்து ஜோசப். இந்நிலையில் தற்போதைய த்ரிஷ்யம் 3 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.

கொஞ்சம் கூட யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் காட்சிகளை வைத்து மொத்த பேரையும் கவர்ந்து விட்டார் ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம் 3 படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என நம்பலாம். த்ரிஷ்யம் 3 படம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.

Trending News