கடந்த சில வருடங்களாகவே மலையாள சினிமாவின் தரம் உலக சினிமா ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளது என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு தரமான படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் வந்த திரைப்படம் தான் திரிஷ்யம். சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. காட்சிக்கு காட்சி சுவாரசியத்தை கூறி மிரட்டி இருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அதற்கு தகுந்த மாதிரி மோகன்லாலின் நடிப்பு அபாரம்.
அதனைத் தொடர்ந்து வெளியான திரிஷ்யம் 2 படம் முதல் பாகத்தை விட சிறப்பாக இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திரிஷ்யம் 2 படத்தையும் ரீமேக் செய்வதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் திரிஷ்யம் 3 படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் இருவருமே உறுதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் திரிஷ்யம் 3 திரைப்படத்தின் கதை எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் காவல்துறையினரிடம் உண்மையை ஒப்புக் கொள்வது போல காட்சி அமைந்திருக்கும். ஆனால் இறந்த பையனின் உடலை மாற்றி போலீசாரை திண்டாட வைத்து மீண்டும் குடும்பத்தை காப்பாற்றியிருப்பார். மேலும் அந்த போலீஸ்காரர் கூறுகையில், நம்ம அவனை நோட்டம் விட வில்லை, அவன் தான் நம்மளை நோட்டம் விட்டிருக்கிறான் என்று கூறி படத்தை முடித்திருப்பார்கள்.
இந்நிலையில் மூன்றாவது பாகத்தில், ஒரு பையனைக் கொன்ற மனசாட்சி மோகன்லாலுக்கு உறுத்தி கொண்டே இருக்குமாம். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் படம் எடுப்பதற்காக எழுதச் சொன்ன கதையை மூன்றாம் பாதத்தில் மோகன்லால் ஒரு படமாக எடுக்கலாம். அதில் உண்மையில் மோகன்லாலின் மகளிடம் அந்த பையன் எப்படி நடந்து கொண்டான் என்பதையும், அதன் காரணமாக தன்னுடைய குடும்பம் பட்ட அவஸ்தையும் அந்தப்படத்தில் கூறி அந்த பையனின் பெற்றோர்களுக்கு உணர்த்த வாய்ப்பு இருக்கிறதாம். மேலும் அந்தப் படத்தைப் பார்த்த மக்கள் ஹீரோவுக்கு சப்போர்ட் செய்வது போலவும், வசதியான பெரிய வீட்டு பையன்களை எதிர்ப்பது போலவும் கதை அமையுமாம்.
அந்த படத்தை பார்த்துவிட்டு மீண்டும் போலீசார் துப்பறியும் வேலையில் இறங்குவதும், அதை கிளைமாக்ஸில் மோகன்லால் எப்படி முறியடிக்கிறார் என்பதையும் சுவாரஸ்யம் கூட்டி சொல்லுவார்களாம். இந்த வகையில் படம் அமைந்தால் பிளாக் பஸ்டர் ஹிட் அடிப்பது உறுதி. மேலும் திரிஷ்யம் 3 படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு பேசப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.