செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அடுத்தடுத்த தோல்வியால் சுந்தர் சி எடுத்துள்ள முடிவு.. லோ பட்ஜெட்டில் கல்லா கட்ட கையில் எடுத்த அஸ்திரம்

சுந்தர் சி ஆரம்பத்தில் இயக்கிய படங்கள் நகைச்சுவை உடன் ஃபேமிலி என்டர்டைமென்ட் படமாக இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் டாப் 10 இயக்குனர்களில் சுந்தர்சியும் இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது.

அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் போட்டியாக சுந்தர் சி யின் காபி வித் காதல் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. இப்படியே தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்த வந்தால் கேரியர் அவ்வளவுதான் என சுந்தர் சி முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

Also Read : சுந்தர் சி-யின் தொடர் தோல்வி, அடுத்த பட கூட்டணியில் இருந்து விலகிய ஹீரோ.. வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்

அதாவது சுந்தர் சி பேய் படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி, ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளியான அரண்மனை படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது. அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களையும் இயக்கியுள்ளார்.

அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் ஓரளவு லாபத்தை ஈட்டியது. ஆகையால் அரண்மனை 4 படத்தை சுந்தர் சி எடுக்க உள்ளாராம். இந்த படத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்த ராசி கண்ணா கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் தமன்னாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

Also Read : 3 வருடங்களாக தலை காட்ட முடியாமல் போன 37 வயது நடிகை.. காட்டிய கவர்ச்சியில் மயங்கி வாய்ப்பு கொடுத்த சுந்தர் சி

இப்போது தமன்னா நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இப்போது அரண்மனை 4 படமும் தமன்னாவுக்கு கிடைத்துள்ளது. மேலும் சுந்தர் சி இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரத்திற்குள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சுந்தர் சி படங்கள் பிளாப்பினால் அவருக்கு அடுத்தடுத்த படங்கள் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆகையால் அரண்மனை 4 படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுத்து கல்லா கட்டலாம் என்ற முடிவில் இப்போது சுந்தர் சி உள்ளார். மேலும் இந்த படம் குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும்.

Also Read : சங்கமித்ரா படத்திற்காக விட்டுக் கொடுத்த சுந்தர் சி.. அரண்மனை 4 இல் வைக்கப் போகும் ட்விஸ்ட்

Trending News