செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

100 கோடி கிளப்பில் இணைந்த துல்கர் சல்மான்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் படக்குழு

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த முறை ஜி.வி. இசையமைத்த அமரன் படமும் சரி, லக்கி பாஸ்கரும் சரி 100 கோடி வசூலை கடந்துள்ளது. நீங்க அமெரிக்காவுக்கே போயிருங்க சிவாஜி என்பதை போல, இவர் இசைக்கே திரும்பி விட்டார். அது தான் அவருக்கும் நல்லது, எல்லாருக்கும் நல்லது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான லக்கி பாஸ்கர் படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறைந்த திரைகளில் வெளியாகி மக்களிடையே பெற்ற வரவேற்பின் காரணமாக தமிழகத்தில் திரைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 4 படங்கள் வெளியானாலும், ரேஸில் முந்தியது, அமரன் படமும் லக்கி பாஸ்கர் படமும் தான்.

முதல் 100 கோடி வசூல்..

துல்கர் இதற்க்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் தான். தோல்வி படங்கள் என்று எதுவுமே இல்லை என்று கூட கூறலாம். பெண் ரசிகைகள் அதிகம் இருக்கும் இவர், சார்லி படம் மூலம் இந்திய அளவில் பேமஸ் ஆனார். அதை இப்போது ரி.ரிலீஸ் செய்தால் கூட ரசிகர்கள் சென்று பார்ப்பார்கள். ஏன் என்றால் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத ஒரு படம்.

இந்த நிலையில், இவர் எத்தனையோ படத்தில் நடித்திருந்தாலும், வசூல் ரீதியாக பல வெற்றிகளை கொடுத்திருந்தாலும், முதல் முறையாக இப்போது தான் 100 கோடி வசூலை தொட்டுள்ளார். படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி என கூறப்படுகிறது.

தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த ‘மகாநடி’, ‘சீதா ராமம்’ தற்போது ‘லக்கி பாஸ்கர்’ படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு தெலுங்கிலும் ஆடியன்ஸ் உள்ளனர். அப்படி இருக்க கடந்த 1 அரை வருடமாக இவருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால், நடிக்கமுடியவில்லை. இப்படி இருக்க மீண்டும் கேரியரில் கவனம் செலுத்தில், லக்கி பாஸ்கர் படத்தில் அதிரடி காட்டியுள்ளார்.

Trending News