King Of Kotha Review: அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் கிங் ஆப் கொத்தா இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர், ட்ரெய்லர் என அனைத்தும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகி உள்ள படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
மிகப்பெரும் ரௌடியாக அறியப்படும் துல்கர் சல்மானை சுற்றி தான் படம் நகர்கிறது. கதைப்படி கேரளாவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடமாக கருதப்படும் கொத்தா என்ற ஊரில் துல்கர் சல்மான் மற்றும் சபீர் கல்லரக்கல் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். சிறு வயது முதலே தன் நண்பனுடன் ஒன்றாக இருக்கும் துல்கர் சல்மான் மிகப்பெரும் ரௌடியாக அந்த ஊரையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
அவருடைய காதலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமியின் தம்பி போதைக்கு அடிமையாகி இறந்ததால் துல்கர் சல்மான் அந்த பிசினஸை மட்டும் தவிர்த்து விடுகிறார். ஆனால் அவருக்கு தெரியாமல் சபீர் எதிரியுடன் சேர்ந்து கொண்டு அந்த பிசினஸை தொடங்குகிறார். இதனால் வெறுத்துப்போன துல்கர் சல்மான் ஊரைவிட்டு சென்று விடுகிறார்.
அதைத்தொடர்ந்து போலீசாக வரும் பிரசன்னா இந்த வில்லன் கோஸ்டியை அடக்க முடியாமல் மீண்டும் துல்கர் சல்மானை கொத்தா நகரத்திற்குள் வர வைக்க முயற்சி செய்கிறார். அவருடைய முயற்சி என்ன ஆனது, துல்கர் மீண்டும் அந்த ஊருக்கு வந்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை. கே ஜி எஃப் போல் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்ப்பை தக்க வைக்க தவறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
Also read: துல்கர் சல்மானை இயக்கும் அட்லீயின் சிஷ்யன்.. டைட்டிலை வித்தியாசமா இருக்கே! மாஸ் கூட்டணி
படம் முழுக்க ஹீரோவையே மையப்படுத்தி கொடுக்கப்படும் பில்டப் பெரும் சலிப்பை உருவாக்குகிறது. ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மான் நியாயம் சேர்க்க நிறைய முயற்சித்து இருக்கிறார். இருந்தாலும் இந்த சாக்லேட் பாய் முகத்திற்கு அந்த ஆக்சன் அவதாரம் கொஞ்சம் தடுமாறி விட்டது.
அதேபோன்று ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா போன்ற கதாபாத்திரங்களும் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை. மேலும் பாடல்கள், இடைவேளை காட்சி போன்ற எதுவும் மனதில் நிற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் தெளிவான திரைக்கதை இல்லாதது தான். அதனாலேயே இப்படம் எதிர்பார்த்த சுவாரஸ்யத்தை கொடுக்க தவறி இருக்கிறது. அந்த வகையில் கிங் ஆப் கொத்தா வெறும் பில்டப் மட்டுமே.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5