சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நான் சொல்றப்ப தான் பகல், நான் சொல்றப்ப தான் ராத்திரி.. ரவுடிசம் செய்யும் துல்கரின் கிங் ஆஃப் கோதா டீசர்

Actor Dulquer Salmaan: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயம் ஆனவர். பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ட்ரண்டாகிக் கொண்டிருக்கிறது.

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இதன் டீசரே அனல் தெறிக்கிறது. அதிலும் ரவுடியாக அதகளம் செய்திருக்கும் துல்கர் ஆக்ரோஷத்தில் மிரட்டி இருக்கிறார். அந்த வகையில் ட்ரைலரின் ஆரம்பத்திலேயே மக்கள் ராஜாவுக்காக காத்திருக்கிறார்கள் என்ற வசனத்தோடு ஆரம்பிக்கிறது.

Also read: இந்தியன்-2 படம் பார்த்த பின் ஷங்கருக்கு பல லட்சம் பரிசு கொடுத்த கமல்.. இவ்ளோ காஸ்ட்லி வாட்சா.?

அதைத்தொடர்ந்து ராஜாவால் மட்டுமே நம்மை காக்க முடியும் என காத்திருக்கும் மக்களுக்காக ராஜா ஒரு நாள் வந்தார் என்ற ட்விஸ்ட்டோடு துல்கரின் என்ட்ரி காட்டப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் ரத்தம் தெறிக்கிறது. மேலும் இங்க நான் சொல்றது தான் பகல், நான் சொல்றது தான் இரவு என துல்கர் பேசும் வசனம் அவருடைய கேரக்டரை உணர்த்துகிறது.

அதை தொடர்ந்து இரு ரவுடி கும்பலுக்குள் இருக்கும் பிரச்சனை போலீஸ் அடிதடி சண்டை என டீசர் பரபரப்பாக நகர்கிறது. இறுதியில் வாயில் சிகரெட், நீண்ட தலைமுடி என துல்கரின் கெட்டப் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக டீசரை வெளியிட்டுள்ள பட குழு ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.

Also read: பைத்தியக்காரராக நடித்து வெற்றி பெற வைத்த 6 படங்கள்.. விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்

அதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் துல்கருடன் இணைந்து இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா உள்ளிட்ட பிரபலங்களும் இடம்பெற்று இருப்பதும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அதிலும் பிரசன்னாவின் தோற்றத்தை பார்க்கும் போது நிச்சயம் இதில் நெகட்டிவ் ரோலாக தான் இருக்கும் என தோன்றுகிறது. அந்த வகையில் இந்த கிங் ஆஃப் கோதா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விரைவில் வர இருக்கிறார்.

Trending News