புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவின் அப்பா கதையை முடித்த துர்கா.. மனைவியை காப்பாற்ற போராடும் கார்த்திக்

Karthigai deepam serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவை கண்டுபிடிப்பதற்கு கார்த்திக் பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் தீபா சுயநினைவு மறந்ததால் சக்தி ட்ரீட்மென்ட் செய்து வருகிறார். ஆனால் குடும்பத்தை பற்றியும் கார்த்திக் பற்றியும் தெரிந்து கொண்ட சக்தி எப்படியாவது தீபாவை பற்றி உண்மையை சொல்ல வேண்டும் என்று வரும்போதெல்லாம் துர்கா மிரட்டுவதால் சக்தியால் உண்மை சொல்ல முடியாமல் போய்விடுகிறது.

தற்போது தீபாவின் அப்பா மகளை கண்டுபிடிக்கும் வரை நான் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டே தான் இருப்பேன் என்று கோவிலில் வாசித்துக் கொண்டிருக்கிறார். அங்கே வந்த சக்தி, தீபாக்கும் இவருக்கும் சம்பந்தம் இருக்கும் என்று யோசித்து அவரிடம் பற்றி தீபாவை பற்றி கேட்கிறார். அப்பொழுது அவர் என்னுடைய மகள் தான் என்று சொல்லிய நிலையில் உங்க பொண்ணு தீபா என்னுடன் தான் இருக்கிறார்.

இதை கார்த்திக் சாரிடம் சொல்ல வரும் பொழுது துர்கா என்னை தடுத்து மிரட்டுவதால் என்னால் எந்த உண்மையும் சொல்ல முடியவில்லை என்று சொல்லி தீபாவின் அப்பாவை கூட்டிட்டு கிளம்புகிறார். ஆனால் அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த துர்கா, தீபா எங்கே இருக்கிறார் என்று கேட்டு மிரட்டுவதால் சக்தி அந்த இடத்தை விட்டு போய் விடுகிறார்.

ஆனால் துர்காவிற்கு சக்தி போனா என்ன தீபாவின் அப்பாவை நம் கஸ்டடிக்கு கொண்டுட்டு போயி நம்மள தேடி வர வைக்கலாம் என்று தீபாவின் அப்பாவை தூக்கிட்டு போகிறார்கள். அதன் பிறகு சக்திக்கு வீடியோ காலில் பேசி நீ தீபாவை இங்கே கூட்டிட்டு வரவில்லை என்றால் அவருடைய அப்பாவை நான் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இதற்கிடையில் வேறு வழி தெரியாத சக்தி, தீபாவை கூட்டிட்டு துர்கா சொன்ன இடத்திற்கு போகிறார். அங்கே போனதும் துர்கா மொத்த கோபத்தையும் காட்டும் விதமாக தீபாவை கத்தியால் குத்தப் போகிறார். இதை பார்த்த தீபாவின் அப்பா தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த கத்திக்குத்தை வாங்கி விடுகிறார்.

ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் கார்த்திக் அந்த இடத்திற்கு போகாமல் நாடகத்தை இழுத்தடிப்பது கொஞ்சம் பார்க்க போராக இருக்கிறது. இருந்தாலும் கடைசி நிமிஷத்தில் கார்த்திக் அந்த இடத்திற்கு போய் மனைவி தீபாவையும் மாமனாரையும் காப்பாற்றி விடுவார். கடைசியில் துர்கா தோற்றுப் போய் ஜெயிலுக்குப் போகும் நிலைமை வந்துவிடும்.

Trending News