புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கார்த்திக்கை பழிவாங்க ஐஸ்வர்யாவுடன் ஸ்கெட்ச் போட்ட துர்கா.. தீபாவுக்கு வரும் ஆபத்திலிருந்து காப்பாற்றும் கீதா

Karthigai Deepam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக், தீபா எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்கிறார். அந்த வகையில் ஒரு கச்சேரியை ஏற்பாடு பண்ணி அதை போஸ்டர் மூலம் எல்லா பக்கமும் ஒட்டி தீபா பாட வருவதற்கு ஒரு பிளான் பண்ணி வைத்திருக்கிறார். அதனால் கார்த்திக்கின் ஒட்டுமொத்த குடும்பமும் எப்படியும் இந்த கச்சேரிக்கு தீபா வந்து விடுவார்.

அதன் மூலம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்திடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த ஒரு சான்ஸை நாம் மிஸ் பண்ண கூடாது என்பதற்கு ஏற்ப துர்கா, தீபாவை கொலை செய்து கார்த்திகை பழிவாங்க ஐஸ்வர்யாவுடன் ஸ்கெட்ச் போட்டு விட்டார். ஏற்கனவே துர்கா, தீபாவை கொலை செய்யும் பொழுது மகளை காப்பாற்ற வேண்டும் என்று தர்மலிங்கம் உயிரை விட்டுவிட்டார்.

ஆனாலும் தன்னுடைய பழிவாங்கும் எண்ணம் கொஞ்சம் கூட குறையாமல் துர்கா ஆவேசத்துடன் தீபாவை கொலை செய்வதற்கு முடிவு பண்ணிவிட்டார். அதன்படி தீபா கச்சேரியில் பாடும் பொழுது அசம்பாவிதத்தை ஏற்படுத்தி கார்த்தி கண்ணு முன்னாடியே தீபாவை காலி பண்ண வேண்டும் என்று ஐஸ்வர்யா ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறார்.

ஆனால் எப்படியும் இந்த கச்சேரியில் தீபா உயிருக்கு ஆபத்து வரும் என்று தீபாவை பாதுகாக்க கார்த்திக் முன் ஏற்பாடுகள் செய்திருப்பார். இருந்தாலும் இதில் எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது, தீபா உயிருக்கும் ஆபத்து வரக்கூடாது என்பதற்கு ஏற்ப கீதாவும் தயாராக இருக்கிறார். அந்த வகையில் தீபாவுக்கு வரும் ஆபத்திலிருந்து கீதா தான் காப்பாற்ற போகிறார்.

அதாவது தீபாவை கொலை செய்ய வரும்பொழுது நடுவில் கீதா மாட்டிக் கொண்டு தீபாவை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து தீபாவுக்கும் சுயநினைவு வந்து குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து விடுவார். ஆனால் அதன் பிறகு தன்னுடைய அப்பா இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று குற்ற உணர்ச்சியில் வருத்தப்பட்டு அம்மாவையும் குடும்பத்தையும் தன்னுடனே வைத்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு தீபா மற்றும் கார்த்திக் சேர்ந்து முடிவு எடுத்து நாடகத்தை முடிக்க போகிறார்கள்.

Trending News