சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் துஷாரா விஜயன்.. வேட்டையனில் கிடைத்த பவர்ஃபுல் கேரக்டர்

Dushara Vijayan : ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் துஷாரா விஜயன். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாமே பெரிய அளவில் பேசப்படுகிறது. அந்த வகையில் அநீதி படத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ராயன் படத்திலும் துஷாரா விஜயன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் தனுஷின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு ஒரு கொடுமை நேர்ந்தது போல் காட்டப்பட்டிருந்தது.

பல நடிகைகள் இந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் காட்டிய நிலையில் துஷாரா துணிச்சலாக அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதேபோல் இப்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் படத்தில் சரண்யா டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் துஷாரா நடித்துள்ளார்.

வேட்டையன் படத்தில் கலக்கிய துஷாரா விஜயன்

இந்தப்படத்திலும் அவருக்கு அதுபோன்று காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் துஷாரா இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதால் தொடர்ந்து இவருக்கு இயக்குனர்கள் இந்த காட்சிகளை வைக்கிறார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை நடிப்பின் மூலம் தொடர்ந்து துஷாரா நிரூபித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் வீரதீர சூரன் படத்தின் துஷாரா நடித்து வருகிறார்.

இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இப்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் மற்றும் பகத் பாசஸின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Trending News