OTTயில் வெளியாகி தற்போது வெற்றி நடைபோட்டு வருகின்ற திரைப்படம்” சார்பட்டா பரம்பரை”. திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களுடைய கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்துள்ளனர்.
அந்த வரிசையில் அத்திரைப்படத்தின் ஹீரோயின் ‘துஷாரா விஜயன்’ அவர்களுடைய நடிப்பும் ரசிகர்களிடையே அதிக பாராட்டைப் பெற்றுள்ளது. போதை ஏறி புத்தி மாறி, அன்புள்ள கில்லி ஆகிய திரைப்படங்களில் நடித்த திண்டுக்கல்லை பூர்விகமாக கொண்ட துஷாரா விஜயன் ரசிகர்களுக்கு அளித்த பேட்டியில் மிகவும் சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பின்போது படக்குழுவினர் மற்றும் சக நடிகர்கள் அனைவரும் செமையாக கலாய்ப்பார்கள் .ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் ரொம்ப ஜாலியா இருக்கும் என்றார். வட சென்னையில் நடந்த குத்து சண்டையை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் என்பதால் நான் சென்னை பாஷையை கற்றுக் கொள்ள கொஞ்சம் சிரமப் பட்டேன் என்று கூறியிருக்கிறார்.
டப்பிங்கில் அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டது நான் தான் என்றும் தொண்டை வலியால் அவதிப்பட்ட தாகவும் அவர் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் மற்ற மாநில நடிகைகள் கோலோச்சி இருக்கும் நிலையில் தமிழ் பேசும் தமிழ்நாட்டு பெண் நடித்து வெற்றி பெற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும், தாய் மொழியில் பேசி, நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
துஷாரா விஜயன் நடிகை மட்டுமின்றி ஒரு மாடலாகவும் இருப்பவர் டிவி விளம்பரங்களில் நடிப்பவர். தற்போது இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.