திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மருதநாயகத்திற்காக ஆக்ராவிலிருந்து வந்த பறவை.. ஆண்டவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்

பல வருடங்களுக்கு முன்னால் அதாவது 1997 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் மருதநாயகம் என்ற திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. அவரே இயக்கி, தயாரித்து, நடிக்க இருந்த அந்த திரைப்படம் பணப் பிரச்சினையின் காரணமாக பாதியிலேயே நின்று போனது.

ராணி இரண்டாம் எலிசபெத், கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல பிரபலங்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட அந்த திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருந்த திரைப்படம் மீண்டும் தயாராகுமா என்ற கேள்விதான் இப்போது பலரின் மனதிலும் இருக்கிறது.

Also read:பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

ஏனென்றால் அப்போது வெளியான மருதநாயகத்தின் டிரைலரே படு மிரட்சியாக இருந்தது. அதுவும் கமலின் தோற்றமும், காளை மாட்டின் மீது அவர் ஏறி வரும் அந்த காட்சியும் பலரையும் மிரட்டியது. மேலும் படம் சம்பந்தப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் இன்று வரை பலருக்கும் வியப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே கமலின் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது ஒரு பேட்டியில் கமல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு முக்கிய காட்சி பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார். அதாவது அந்த ட்ரைலரின் ஒரு காட்சியில் கமல் உடலில் அம்புகள் துளைக்கப்பட்டு கீழே விழுந்து கிடப்பார்.

Also read:கமல், விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்..பக்காவாக காய் நகர்த்தும் உலகநாயகன்.!

அப்போது ஒரு கழுகு அவருடைய காலை கொத்தும். அந்த காட்சிக்காகவே ஆக்ராவிலிருந்து அந்த கழுகு வரவழைக்கப்பட்டதாம். அது மட்டுமல்லாமல் அந்த கழுகை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும் என்பதற்காக நட்சத்திர பாதுகாப்பு கூட போடப்பட்டதாம்.

இப்படியாக கமல் ஒவ்வொரு காட்சிக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அவரின் கனவு படமான இந்த மருதநாயகம் இதுவரை நனவாகாமலே இருக்கிறது. வருடங்கள் கடந்துவிட்டபடியால் அதை மீண்டும் உருவாக்குவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கமலுக்கே புரியாத ஒன்றாக தான் இருக்கிறது.

அதற்கு அவருடைய வயதும் ஒரு காரணம். ஆனால் இப்படி ஒரு பெரும் முயற்சியை ஆண்டவரை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கமல் மீண்டும் மருதநாயக பிள்ளையின் வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read:42 வருட தவம், யாருக்கும் விட்டுக் கொடுக்காத மணிரத்தினம்.. வெறிகொண்டு காத்திருக்கும் திரையுலகம்

Trending News