புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அதிகாலை காட்சிக்கு தடை.. சண்டையால் வாரிசு, துணிவு படத்திற்கு அதிரடி உத்தரவிட்ட அரசு

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.

இதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதற்கான டிக்கெட் விலையையும் அதிகபடியாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளது.

Also Read : ஷாருக்கானுக்காக விஜய் வெளியிட்ட பதான் பட ட்ரெய்லர்.. பாலிவுட் மலைபோல் நம்பி இருக்கும் படம் ஜெயிக்குமா?

அதாவது நாளை ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மட்டுமே நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்து பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு என 2 படங்களுக்குமே அதிகாலை காட்சிக்கு தடை விதித்துள்ளது.

ஏனென்றால் அதிகாலை காட்சிகள் ஒளிபரப்பாகும் போது இருதரப்பு ரசிகர் கூட்டம் இடையே அதிக சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பண்டிகை காலங்கள் என்பதாலும், சண்டையைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் விடுமுறை நாட்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை.

Also Read : கோலிவுட்டை குத்தகைக்கு எடுக்கும் தில் ராஜு.. வாரிசுக்கு பிறகு போடும் மாஸ்டர் பிளான்

இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்களை தாண்டி தியேட்டர் உரிமையாளர்களுக்கு தான் மிகப்பெரிய இடியாக இறங்கி உள்ளது. அதாவது பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை என்பதால் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுப்பார்கள்.

இதன் மூலம் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூலை பொங்கல் பண்டிகையிலேயே அள்ளி விடலாம் என்ற திட்டம் போட்டு இருந்தனர். ஆனால் இப்போது அரசின் அறிவிப்பால் அவர்களது திட்டம் தவிடுபொடி ஆகியுள்ளது. மேலும் துணிவு மற்றும் வாரிசு படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களை உள்ளதால் உச்சகட்ட பரபரப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : முதல் காட்சியிலேயே பல கோடிகள் ஆட்டையை போடும் திரையரங்குகள்.. வாரிசு, துணிவால் அழியும் கலாச்சாரம்

Trending News