வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

இயக்குனர் சங்கரின் 10 கோடி சொத்து முடக்கம்.. ரஜினியின் எந்திரனால் ஆரம்பித்த ஏழரை

Shankar: சந்திரன் கேட்டதும் பெண்ணாலே, இந்திரன் கெட்டதும் பெண்ணாலே கடைசியில் எந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று ரோபோ படம் ரிலீஸ் ஆன சமயத்தில் சொல்வது உண்டு.

உண்மையில் இயக்குனர் சங்கர் கெட்டுப் போனது எந்திரன் படத்தாலே என்று ஆகிவிட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரஜினி நடித்த எந்திரன்.

சினிமா ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் புதிது என்பதால் படத்தின் வசூல் கொள்ளை லாபம் கொடுத்தது. இந்த நிலையில் பிரபல பத்திரிகை ஆசிரியர் தான் எழுதிய ஜூகிபா என்னும் கதையைத்தான் ஷங்கர் எந்திரன் படமாக எடுத்திருக்கிறார்.

எந்திரனால் ஆரம்பித்த ஏழரை

இது காப்புரிமை விதிமீறல் என கேஸ் போட்டிருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கதை திருட்டு உறுதியாகி இருக்கிறது.

இதனால் அமலாக்கத்துறை 10 கோடி மதிப்பிலான ஷங்கரின் மூன்று அசையா சொத்துக்களை முடக்கி இருக்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு வரும் சங்கருக்கு இது பேரிடியாக அமைந்திருக்கிறது.

Trending News